பக்கம்:இருளும் ஒளியும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இருளும் ஒளியும்

முனைந்திருந்தாள். அவளிடமிருந்த ஏழெட்டுப் பட்டுப் புடைவை: கரில் ஒன்ருவது அவள் மனத்துக்குப் பிடித்ததாக இல்லை. கடையிலிருந்து வாங்கும்போது என்னவோ அந்தப் புடைவை: க: ஆசையுடன்தான்் வாங்கிக்கொண்டாள். நாழிக்கொரு. மோஸ்தரும். வேளைக்கொரு அலங்காரமுமாக மாறி மாறி வரும் புடைவை ரகங்கஃப் பார்த்தபோது அந்தப் புடைவைகள் அவருக்குப் பழைய ரகங்களாகத் தோற்றமளித்தன. சலிப்புடன் அவள் பிரோவைப் பட்டென்று மூடும்போது, சீதா கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள். கையிலிருந்த புடைவை கஃாச் சோபாவில் போட்டுவிட்டு, 'எதையாவது சீக்கிரம் நிச்சயம் பண்ணு சாவித்திரி. எனக்குக் கொள்ளை வேலை காத்துக் கிடக்கிறது' என்று கூறினுள் தமக்கையிடம்.

சாவித்திரியும் சீதாவும் உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் குணத்தில் ஒருவருக்கொருவர் அதிக வித்தி யாசத்தைப் படைத்தவர்கள். எவ்வளவு ஆடை, ஆபரணங்கள் இருந்தாஅம் சாவித்திரியின் மனம், போதும் என்று ஒப்புக் கொள்ளாது. சீதாவுக்கோ சாதாரண வாயில் புடைவை இருந் தால் போதும். இருவருக்கும் பெற்ருேர்கள் ஒரேமாதிரி ஆடை, ஆபரணங்கள் வாங்கி அளித்திருந்தாலும் சீதாவின் பொருள்கள் தாம் சாவித்திரிக்குப் பிடித்தமானவைகளாக இருக்கும்.

சாவித்திரி, சோபாவில் கிடந்த புடைவைகளைப் புரட்டிப் பார்த்தாள். தன்னுடையவையாக இருந்தால் நலங்கிவிடுமே, மடிப்புக் கலந்துவிடுமே என்று யோசனை செய்திருப்பாள். சிதாவின் புடைவைகள்தாமே அவைகள்! அவைகள் எப்படிப் போனல் என்ன! புடைலைகளே இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்துவிட்டு, 'ஏண்டி இந்தக் கனகாம்பரக் கலர் கிரேப் புடைவையை உடுத்துக்கொள்கிறேனே. நீயும் இதைத்தான்் "செலக்ட்' பண்ணி இருக்கிருயா என்ன?' என்று நிஸ்டுரமாகக் கேட்டாள் சீதாவைப் பார்த்துச் சாவித்திரி.

'ஹும். ஹாம். . பெண் பார்க்க வருவது உன்னையே தவிர என்னை அல்ல சாவித்திரி உனக்குத்தான்் தெரியுமே. எனக்கு இந்தப் பகட்டான புடைவை யெல்லாம் பிடிக்காது என்று'.சாவதான்மாகப் பதிலளித்த சீதா, தான்் பொறுக்கி எடுத்த புடைவையை வைத்துவிட்டு மற்றவைகளைத் திரும்பவும் பிரோவில் அடுக்கி வைப்பதற்கென்று தன்னுடைய அறைக்குத் திரும்பினள்,