158 இருளும் ஒளியும்
'இங்கே எதற்காக வந்தாய் யாருக்காக வந்தாய்? உன்னை நாடுபவளே நீ நாடிப் போகாமல் கானல் நீரை நம்பி வந்திருக் கிருயா? தங்கத்தை என்ன என்று நினைத்துக்கொண்டு வந்தாய் அத்தான்்? மலேயிலிருந்து பள்ளத்தில் வழியும் அருவி பார்ப்ப தற்கு ரம்மியமாகத்தான்் இருக்கும். தொலைவில் நின்று அதன் அழகை நினைத்து வியக்கலாம். பார்த்து ரவிக்கலாம். தவறிப் போய் அதில் காலை வைத்தோமானல் பரலோகம் போக வேண்டி யதுதான்். நீ மணமானவன். உன்னுடைய கடமையைப் புறக் கணித்துவிட்டுத் தங்கத்தைப் பார்க்க நீ வந்திருக்கக் கூடாது. அந்தப் பெண் பாவம் வெகுளி. அவளுக்கு என்ன தெரியும் அத்தான்்?' என்று படபடவெனக் கூறினுள் ஸரஸ்வதி.
ரகுபதி செயலிழந்து நின்றுவிட்டான். ஸரஸ்வதி சங்கிதத் தில்தான்் தேர்ந்தவள். தர்ம சாஸ்திரத்திலும் தேர்ந்தவளா?
"படபடவென்று வார்த்தைகளைக் கொட்டி அத்தான்க் கோபித்துக்கொண்டோமே என்று ஸரஸ்வதி வருந்தினள். பிறகு சமாதான்ம் அடைந்து, "ரொம்பவும் இளைத்துப்போய் விட்டாய் அத்தான்். அத்தை பார்த்தால் உருகிப்போய் விடுவாள். வா, வீட்டிற்குப் போகலாம். தங்கத்தைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. வா!' என்று அன்புடன் அவன அழைத்தாள்.
ரகுபதி பேசுவதற்கோ. தர்க்கிப்பதற்கோ ஒன்றும் இல்லை. மறுமொழி கூருமல் ஸரஸ்வதியுடன் அவன் வீட்டை நோக்கி நடந்தான்். அவர்கள் வீட்டை அடையும்போது மாலை மூன்று மணிக்கு மேலாகிவிட்டது. கொல்லைப் பக்கம் மாட்டுத் தொழு வத்திலிருந்து தங்கம் ஸரஸ்வதி வருவதைக் கவனித்துவிட்டாள். சந்தோஷத்தால் அவள் மனம் துள்ளியது. துள்ளி ஒடும் கன்றைப்போல, ஸரஸ் அக்கா!' என்று வாய் நிறைய அழைத்துக்கொண்டு முற்றத்துக்கு வந்து ஸரஸ்வதியை இறுகச் சேர்த்து அணைத்துக்கொண்டாள் தங்கம்.
என்னைப் பார்ப்பதற்குத்தான்ே அக்கா இவ்வளவு துாரம் வந்திருக்கிருய்? என்னிடம் உள்ள வாஞ்சையினுல்தான்ே அக்கா இங்கே வந்தாய்?' என்றெல்லாம் சந்தோஷம் தாங்காமல் கேட்டாள். -
"ஆமாம், அதற்காகத்தான்் வந்தேன். தங்கம் நீ எப்படி இருக்கிருய் என்று பார்ப்பதற்குத்தான்் வந்தேன்' என்று ஸரஸ்வதி கூறி அவளைச் சேர்த்து அணைத்துக்கொண்டாள்.