பக்கம்:இருளும் ஒளியும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விமோனம் உண்டா 161

==

தான்். பெற்றவர்களுக்கும் உறவினர் கருக்கும் பாரமாக இருக்

கிறேன். எனக்குக் கல்யான ஆகவில்லேயே என்று அம்மா விட்டைவிட்டு வெளியிலேயே வருவதில்லே. பெரியம் மாவேறு மரம்மாதிரி நிற்பதாகச் சொல் கிருள். கன்னிப்பெண்,

வாழாமல் விட்டுடன் இருப்பதால்தான்் தரித்திரம் பிடுங்குவதாக பெரியம். கோபித்துக்கொள் கிருள். எனக்கு விமோசனம் ஏற்படுமா அக்கா? என்னை மனந்துகொள்ள யாராவது முன் வருவார்களா?' என்று கண்ணிர் வழியக்கேட்டு, ஸ்ரஸ்வதியின் மடியில் முகத்தைப் புதைத் துக்கொண்டு தேம்பினுள் தங்கம்.

ஸ்ரஸ்வதியின் மனம் துடித்துப் போய்விட்டது. எல்லா வசதிகளும் இருக்கும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளும் படி அப்பா மைசூரில் பன்முறை கேட்டாரே. இன்றைக்கு சரி யென்று தலை அசைத்தால் கல்யாணம் நடந்துவிடும். அப்பாவை அழைத்து வந்து இந்தப் பேதைப் பெண்னேக் காட்டாமல் போைேமே. வாழ வழி தெரியாமல் ஆயிரக் கணக்கில் பரிதவிக்கும் தமிழ் நாட்டுக் கன்னிகைகளைத் தங்கம் ஒருத்தியின் மூலமாகப் பார்த்துவிடலாம். இப்படி இருக்கும் போது எனக்கு என்ன கல்யாணத்துக்கு அவசரம்? பன மில்லையா? அழகில்லையா? எனக்குக் கல்யாணம் நடக்காமல் போய்விடுமா? தங்கத்துக்குத்தான்் முதலில் வாழ வழி செய்யவேண்டும். ஆமாம்!' என்று ஸரஸ்வதி தனக்குள் பேசிக் கொண்டாள்.

மடியில் முகத்தைப் புதைத்துக்கொண் டிருக்கும் தங்கத்தின் முகத்தைப் பரிவுடன் நிமிர்த்தி. கல்யாணம் நடக்கும். உனக்கு நல்ல கணவன் கிடைப்பான். என் மனம் அவ்விதம் கூறுகிறது. அதை நம்புகிறேன். அழாதே அம்மா!' என்று தேற்றிஞள்.

தங்கம் மறுபடியும் தன் முத்துப் போன்ற பற்கள் தெரிய நகைத்தாள்.

'இந்த ஊரில் உள்ள குடியான ஜனங்களும் அப்படித்தான்் சொல்கிரு.ர்கள், அக்கா. அர்ச்சுனராஜா மாதிரி எனக்குப் புருஷன் கிடைப்பாளும். தி ட மா ன நம்பிக்கையுடன் சொல்கிரு.ர்கள்;. நீயும் சொல்கிருய் அக்கா!' என்ருள்.

ஸ்ரஸ்வதி அர்த்த புஷ்டியுடன் தலை அசைத்து, ' ஏழை ஜனங்கள் உள்ளார்ந்த அன்புடன் கூறும் வாக்கு பொய்க்காது. உள்ளம் நிறைந்து பேசுகிரு.ர்கள். தங்கள் எதிரில் வளர்ந்து

இ. ஒ. 11

தங்கம்! கட்டாயம் உனக்குக்