மாமியார் நாட்டுப்பெண் 3.
இதற்குள்ளாகச் சமையலறையில் சிறு பூகம்பம் ஒன்று ஏற் பட்டது என்று கூறலாம். ஜப மாலேயை உருட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த பாட்டி, தன் நாட்டுப்பெண் மங்களத்தைப் பார்த்துத் திடீரென்று ஒரு கேள்வி கேட்டாள்.
என்ன உயர்வு என்று இந்த வானே ரிச்சயம் .ன்னணி இருக்கிறிர்கள்? பிள்ளைக்கு வே. இல்லையாமே! சொத்து இருந்து விட்டால் போதுமா? புருவுளுய், கடினமாய், வேலை பார்க்காமல், பொழுது விடிந்து பொழுது போளுல் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டு! கேட்கச் சகிக்கவில்லையே! என்று பாட்டி கோபத்துடன் கூறிவிட்டு, வேகமாக ஜபமாலையை உருட்டினுள். மங்களத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அந்த நாளில் ராஜமையர் உத்தியோகம் பண்ணிக் கிழித்தது அவ ளுக்குத் தெரிந்ததுதான்ே? இருந்த வேலையையும் ஒரே நாளில், 'சத்தியாக்கிரகம் பண்ணி ஜெயிலுக்குப் போகிறேன்" என்று ஆரம்பித்து, ராஜிநாமா செய்தவர் ஆயிற்றே! பிறகு சிதா பிறக்கிறவரைக்கும் பத்திரிகைகளுக்கு விஷயதான்ம் செய்தே குடும்பம் நடத்தவில்லையா? மாமியாருக்கு இதெல்லாம் மறந்து போனதைப்பற்றி மங் ளத்துக்குக் கோபமும் ஆத்திரமும் ஏற். பட்டன. அடுப்பில் காய்ந்துகொண் டிருந்த நெய்யில் முந்திரிப் பருப்பையும் திராகைடியையும் போட்டு வறுத்துக்கொண்டே, மாமியாருக்குப் பதில் கூருமல் இருந்தாள் மங்களம்.
உருட்டிக்கொண் டிருந்த ஜபமாலையைச் சம்புடத்தில் வைத்துவிட்டு, இரண்டு உத்தரணி ஜலத்தை ஆசமனியம்' செய்தாள் பாட்டி. பிறகு, ' கூடப் பிறந்தவர்கள் எத்தன. பேராம்?' என்று கேட்டாள் நாட்டுப்பெண்ணே.
இனிமேலும் பதில் கூருமல் இருக்க முடியாது என்று. தெரிந்து. "ஒரே பிள்ளைதான்் பிக்கல், பிடுங்கல் ஒன்றும் கிடையாது. தகப்பளுர் வேண்டியது சம்பாதித்து வைத்திருக் கிருர் பிள்ளைக்குச் சங்கீதம் என்றால் ரொம்ப ஆசையாம். சீக்கிரத்திலேயே சங்கீதப் பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பிக்கப் போகிருளும்!' என்ருள் மங்களம்.
'பாட்டுப் பள்ளிக்கூடம் வைப்பது ஒரு உத்தியோகமா! : போகிறதே இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் புத்தி! ஆயிரம் ஆயிரமாகக் கொட்டிப் பரிகை பாஸ் பண்ணிவிட்டுச் செருப்புக் கடை வைத்துச் சம்பாதிக்கிறேன் என்று ஆரம்பிக்கவில்லையா