பக்கம்:இருளும் ஒளியும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

さ3

'இன்னும் கோபமா ?”

அழகே உருவமாக இருந்த சாவித்திரி சில மாதங்களில் எப்படித்தான்் மாறி விட்டாள்? கண்களைச் சுற்றிக் கருமை படர்ந் திருந்தது. 'கொழு கொழு வென்று இருந்த கன்னங்கள் ஒட்டி உலர்ந்து போயிருந்தன. அவளுடைய சிவப்புக்கூட மாறி விட்டதாக வீட்டில் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். மகளேப் பார்த்துப் பார்த்து மங்களம் தனிமையில் கலங்கிளுள். ஒவ்வொரு தினம் இரவில் சாப்பிடாமலேயே போய்ப் படுத்து விடுவாள் சாவித்திரி. நொடிக்கு ஒருதரம் ஆழ்ந்த பெருமூச்சு விடுவாள். மனக் கஷ்டத்தை யாரிடமாவது கொட்டி அழுது விடலாம் என்றால் அதுதாபத்துடன் யார் கேட்கப் போகிருர்கள்: சீதா இன்னும் விளையாட்டுப் பெண்ணுகவே இருக்கிருள். ஒரு நொடியில் விஷயத்தைச் சொல்லித் தம்பட்டம் அடித்து விடு வாள். அப்பாவிடம் போய் ' என்னை உங்கள் மாப்பிள்ளையிடம் அனுப்பி விடுங்கள்' என்று எப்படிச் சொல்வது? சந்துருவின் எதிரில் நிற்கவே அவளுக்குப் பயமாகவும், வெட்கமாகவும் இருந்தது. தப்பித் தவறி ஏதாவது சொல்லிவிட்டால், "உன்னே யார் போகவேண்டாம் என்கிரு.ர்கள்? புறப்படு போக லாம்' என்று மூட்டை கட்ட ஆரம்பித்துவிடுவான்.

சந்துரு ஊருக்குப் புறப்பட்டுப் போன பிறகு சாவித்திரி காரணமில்லாமல் மகிழ்ச்சி யடைந்தாள். ஒரு சமயம் கலங் கிள்ை. "அவர் வந்துவிடுவார்' என்று தனக்குத்தான்ே சொல்லிக்கொண்டாள். வராமல் இருந்துவிட்டால் நானே போய்விடுகிறேன். பிறந்த வீட்டில் எல்லோராலும் உதா சீனம் செய்யப்படுவதைவிட அவர் கால்களில் விழுகிறேன்" என்று வைராக்கியத்துக்கு மனசைத் தயார் செய்தாள்.

மங்களம். வெந்நீர் அடுப்பு 'பூ' என்று ஊதினுல் கூட, மாப்பிள்ளை வந்துவிடுவான் என்று நம்பி மகிழ்ந்தாள். அடுப்பு ஊதுகிறது. உன் அகமுடையான் வந்துவிடுவான் சாவித்திரி" என்று பெண்ணைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னுள். பெற்ற மனம் பித்துக் கொண்டது என்பதற்கு அவள் ஒர் உதாரணம். i.