பக்கம்:இருளும் ஒளியும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* இன்னும் கோபமா? 167

அன்று. வழக்கமாகக் கூடத்தில் காணப்படும் மங்களத்தின் படுக்கையைக்கூடக் காணுேம். மறுபடியும் மாப்பிள்ளை வந்து "டானிக் கொடுத்து. அவளைப் பிழைக்க வைத்துவிட்டான்!

தினசரி படிப்பதில் முனைந்திருந்த ராஜமையர் தம் மூக்குக் கண்டிையை நிதான்மாகக் கழற்றி வைத்தார். பிறகு திமிர்ந்து பார்த்து, 'வா அப்பா ரகுபதி. அம்மா வரவில்லையா? ஸ்ரஸ்வதி எங்கே?' என்று அழைத்தார். மாப்பிள்ளை மீது அவருக்கு ஏற்பட்டிருந்த கோபம் ஒரு நொடியில் மறைந்துபோனது ஆச்சரியந்தான்். வயதிலும், அதுபவத்திலும் பெரியவராகிய அவர் மாறியது ஒன்றும் வியப்பில்லை. அவர் மாரு விட்டால் மங்களம் அவரை லேசில் விடமாட்டாள்.

"அத்திம்பேரே! நிஜமாகவே வந்து விட்டீர்களே! தீபாவளிக்கு வந்திருந்தால் ஒற்றை வரும்படி. அப்படி வராமற். போனதற்கு இப்பொழுது இரட்டிப்பாக வரும்படி தரப்போகி ருர்கள். தீபாவளிச் சீருடன், கார்த்திகைச் சீரும் சேர்ந்து கிடைக்கப்போகிறது' என்று கேலியாகச் சீதா கூறிச் சிரித்தாள்.

இவர்கள் பேச்செல்லாம் மங்களத்துக்கு ரசிக்கவில்லை. "ஒருவரை-ஒருவர் பிரிந்து மாதக் கணக்கில் இருந்திருக்கிருர்கள். எவ்வளவோ பேசவேண்டி இருக்கும். 'தொன தொன வென்று இவர்களுக்கு என்ன வேலை' என்று நினைத்தாள் அவள்.

ரகுபதி எழுந்து சற்று வெளியே போனபோது, "இந்தாருங் கள்! எல்லாச் சமாசாரங்களையும் ஆற அமரக் கேட்டுக்கொள்ள லாம் ஒன்றும் கொள்ளை போய்விடாது அவன் பெண்டாட்டி யோடு அவனைப் பேசவிடுங்கள்' என்று கூறிவிட்டு விருந்து தயாரிப்பதற்குச் சமையலறைக்கு விரைந்தாள்.

கூடத்துக்கு வேலையாக வந்த சீதா குறும்புத்தனமாகச் சிரித்து. 'அத்திம்பேரே! அதோ உங்கள் சிறை இருக்கிறது. காவல்காரியும் அங்கேதான்் இருக்கிருள்!' என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்.

தனியாக விடப்பட்ட ரகுபதி, சீதா காட்டிய அறையைப் பார்த்தான்். பிறகு துணிவுடன் எழுந்து அறைக்குள் சென்ருன். சாவித்திரிக்கு ஒரு கணம் தன் கால்களின் கீழ் இருக்கும் பூமி நடுங்குவதுபோல் இருந்தது. கட்டிலைக் கையால் பிடித்துக் கொண்டாள். அவனை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சினுள். ரகுபதியின் மனம் அன்பு நிறைந்தது அல்லவா? 'சாவித்திரி!