பக்கம்:இருளும் ஒளியும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 இருளும் ஒளியும்

இன்னும் என் மேல் உனக்குக் கோபமா?' என்று கேட்டு அவள் கரங்களேப் பற்றித் தன் கைகளுடன் சேர்த்துக்கொண்டான்.

உதடுகள் துடிக்க அவள். 'இல்லை' என்னும் பாவனையாகத் தலே அசைத்தாள். அவன் கரங்களேப் பற்றித் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

'எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் சாவித்திரி! புதிய வாழ்க்கை தொடங்குவோம்!' என்று ஆர்வத்துடன் அவள் முகத்தைத் திருப்பி அவளைப் பார்த்தான்் ரகுபதி.

கண்கள் கலந்து உறவாடின. காதலர்களைத் தனியாக

விட்டுவிடுவோம்.