பக்கம்:இருளும் ஒளியும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

கிருகப் பிரவேசம்

மறுபடியும் ஸ்வர்ணம் தன் நாட்டுப் பெண்னே வரவேற்க ஆடி ஒடி வேலைகளைச் செய்துகொண் டிருந்தாள். அடுத்த நாள் கார்த்திகைப் பண்டிகை. சமையலறையிலிருந்து "படபட"வென்று நெல் பொரியும் சத்தம் கேட்டுக்கொண்டே யிருந்தது. பாகீரதி அம்மாமிதான்் மறுபடியும் ஸ்வர்ணத்துக்கு உதவியாக வேலை களைச் செய்ய வந்திருந்தாள். காலம் மாறிப்போய்விடும். குழந்தைகள் பெரியவர்களாகிரு.ர்கள். வாலிப வயதுடையவர்கள் நடுத்தர வயதை அடைகிருர்கள். பிறகு கிழத்தன்மையை அடைகிரு.ர்கள். மனிதர்கள் உருவத்தில் மாறுதல் ஏற்படலாம். குணத்திலே மாறுதல் அடையக்கூடாது. நேற்றுவரை சகஜமாகப் பழகியவர்களிடம் இன்று "நீ யார்? உன்னல் எனக்கு என்ன ஆகவேண்டும்?' என்கிற தோரணையில் பழகக்கூடாது. பாகீரதி அம்மாமி என்றும், எப்பொழுதும் ஒரே சுபாவத்தையுடையவள். ரகுபதி மனைவியை அழைத்து வருகிருன் என்று கேள்விப்பட்ட வுடனேயே ஸ்வர்ணத்திடம் வந்தாள். ' பண்டிகைக்கு என்னல் ஆன உதவிகளைச் செய்கிறேன்' என்று கூறினள். இவள் சாதாரணமாகத்தான்் படித்திருக்கிருள். கோர்வையாக நாலு: வார்த்தை தள் கூடப் பேசத் தெரியாது. படித்த பெண்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களே; சற்றுமுன் பார்த்தவர்களை மறந்துபோய் விடுகிரு.ர்கள்! நாமாகப் பேச முயன்ருலும் தங்களுக்கு அவசர ஜோலி இருப்பதாக ஒடிப்போய்விடுவார்கள். இது ஒரு அசட்டு நாகரிகம்!

வெல்லப் பாகின் வாசனை 'கம் மென்று வீசிக்கொண் டிருந்தது. வேலைக்காரப் பெண் நெற்பதரையும், பொரியையும் பிரித்து எடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். முறத்தி விருந்த பொரியைப் பாத்திரத்தில் கொட்டிவிட்டு ஸ்வர்ணத் தைப் பார்த்து அவள், 'ஏனம்மா! சின்ன அம்மா வந்தால் திருப்பிக் கோவிச்சுகினு பிறந்தவூட்டுக்குப் போயிடுமா என்ன?" என்று கேட்டாள்.