172 இருளும் ஒளியும்
இருக்கிருள்? கல்லை அசைத்தாலும் அசைக்க பாம். அவள் உறுதியை அசைக்க முடியாது' என்ருள் ஸ்வர்ணம்.
சந்துரு மனன்சத் திடப்படுத்திக்கொண்டான். "ஆகட்டும், வலரஸ்வதியையே கேட்டுவிடுகிறேன்' என்று சொல்லிக்கொன் டான். ஆனல் ஸரஸ்வதியைத் தனியாகவே அவளுல் சந்திக்க முடியவில்லே. எப்போதும் அவள் பின்னல் தங்கம் 'அக்கா, அக்கா என்று அழைத்துக்கொண் டிருந்தாள். அந்தப் பெண் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். கேட்டுவிடுவது' என்று தீர்மா னித்துக்கொண்டு அவர்களிருவரும் இருந்த இடத்தை நாடிச் சென்ருன்.
ஸரஸ்வதி புஷ்ப மாலை கட்டிக்கொண் டிருத்தாள். சந்துரு வந்து நிற்பதை ஏறிட்டுப் பார்த்த தங்கம் வெட்கத்தால் குன்றிப் போளுள். 'அக்கா! அவர் வந்திருக்கிருர்' என்ருள். சந்துரு சிரித்துக்கொண்டே, 'ஒரு முக்கியமான விஷயம். நானும் அம்மாவும், சாவித்திரியைக் கொண்டுவந்து விடுவதற்காக இவ்வளவு தூரம் வரவில்லை- o 'நீங்கள் வந்திருக்கும் சமாசாரம் எனக்குத் தெரியுமே! என்னேக் கல்யாணம் பண்ணிக்கொள்ளும்படியாகச் செய்வதற்கு
வந்திருக்கிறீர்கள் அவ்வள, தான்ே-' என்று கூறிவிட்டு: ஸ்ரஸ்வதி யோசித்தாள். பிறகு தைரியத்துடன் நிமிர்ந்து சந்துருவைப் பார்த்து, 'நண்பரே! சிறந்த குணசாவியான
பெண்ணே மணக்க ஆசைப்படுகிறீர்கள். கலை ஆர்வத்தில் மூழ்கி யிருக்கும் நான். உங்களுடைய அருமை மனைவியாக இருக்க முடி யாது. என்னுடைய வழியே அலாதியானது. லட்சியப் பாதை யில் செல்பவர்கள் லட்சியவாதிகளைத்தாம் மணந்து கொள்ள ஆசைப்படுவார்கள். அப்படி இராமல்போளுல் ரகுபதியும், சாவித்திரியும் போலத்தான்் இருக்க வேண்டும். விட்டின் ஒளி யாக, கிருஹலகஷ்மியாக, சகதர்மிணியாக இருக்க வேண்டிய பெண், கலை ஆர்வம் கொண்டவளாகத்தான்் இருக்கவேண்டும் என்பதில்லை. நம்முடைய ஹிந்து சமுதாயம் வகுத்திருக்கிற அரிய விஷயங்களைத் தெரிந்தவளாக இருந்தால் போதும். கணவனிடம் அன்பு காட்டத் தெரிந்தால் போதும். பெற்ற குழந்தைகளே வளர்க்கத் தெரிந்தால் போதும். வீட்டை ஒளி யுடன் வைத்துக்கொள்ளத் தெரிந்தால் போதும். சங்கிதம் தெரிந்த வித்வாம்சினியாகவோ, எழுதத் தெரிந்த எழுத்தாளி யாகவோ, ஆடத் தெரிந்த அதிசயப் பெண்ணுகவோ இருக்க