கிருகப் பிர.ே ரம் 173
வேண்டிய அவசியமில்லை. குணத்தில் சிறந்த பெண் திலகங்கள் நிறைந்த தமிழ் நாடு இது. இதிலே எந்தக் கன்னிகையாவது உங்களேக் கட்டாயம் மனக்க வருவாள். இதோ! இந்தப் பெண் ஏழை என்கிற காரணத்தால் வாழ்வு கிடைக்குமா என்று ஏங்கு கிருள். நீங்கள் மனம் வைத்தால் அவளே வாழவைக்கலாம். தங்கம் எல்லாவிதத்திலும் சிறந்தவள். என்ன விடச் சிறந்தவள். எனக்காவது பாடத் தெரியும் என்கிற எண்ணம் உண்டு. அவள் மனசிலே ஒரு விதமான அகம் பாவமும் இல்லை.'
ஸ்ரஸ்வதி கொஞ்சநேரம் பிரசங்கம் புரிந்தாள். தங்கம் ஆத்திரத்துடன் ஸரஸ்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "" அக்கா! அக்கா! என்ன இப்படிப் பேசுகிருயே?' என்று அதிசயப்பட்டாள்.
சந்துருவின் மனத்தில் புதைந்து கிடந்த பிரச்னைக்கு விடை கிடைத்துவிட்டது. ஸரஸ்வதி லட்சியப் பெண். உன்னதப் பாதையில் நடக்கிறவள். சாமானிய வாழ்விலே அவள் சிக்கி உழலமாட்டாள் என்பதும் தெரிந்துபோயிற்று.
அவன் ஒரே வார்த்தையில் பதில் கூறினன். 'ஆகட்டும் ஸ்ரஸ்வதி.! உன் விருப்பப்படியே தங்கத்தின் பெரியம்மாவைக் கண்டு பேசுகிறேன்' என்ருன். -
அவன் அங்கிருந்து சென்ற பிறகு தங்கம் ப்ரஸ்வதியின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக்கொண்டாள்.
'அக்கா!' என்று தேம்பினுள். "'என்னை விட்டுவிடு அசடே. உனக்குத்தான்் அர்ச்சுனன் கிடைத்துவிட்டானே. நான் எதற்கு?' என்று ஸரஸ்வதி தங்கத்தின் கண்ணுடிக் கன்னங்களில் லேசாகத் தட்டினள்.