மாமியார் காட்டுப்பெண் 11
இவ்விதம் மனஸ்தாபம் மூண்டு எழுந்தாலும் அன்பு நீரால் அத் தம்பதிகள் அதை அனைத்துவிடுவார்கள். மேலே பற்றி எரிய வழி இல்லை அல்லவா?
அடுப்பிலிருந்த வாணலியை இறக்கிவிட்டு மங்களம், மாமி யாருக்கு இலை போட்டாள். பஞ்சபாத்திரத்தில் ஜலத்துடன் "நக்" கென்று இலே முன்னல் வந்து உட்கார்ந்த பாட்டி, "ஆமாம். பிக்கல், பிடுங்கல் இல்லை என்று சொன்னுயே. உனக்கு மாத் திரம் இங்கே என்ன பிடுங்கல்? இந்த வீட்டுக்கு யார் வரக் காத்துக் கிடக்கிரு.ர்கள்? கூப்பிட்டால் வரப்போகிரு.ர்கள். இல்லாவிட்டால் இல்லை' என்று மனஸ்தாபத்தைப் பாதியில் நிறுத்த இஷ்டமில்லாமல் தொடர்ந்து ஆரம்பித்தாள்.
ம ங் க ள த் தி ன் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணிர் வழிந்தது. சமையலறைப் பக்கம் ஏதோ வேலையாக வந்த சந்துரு, தாயின் தர்மசங்கடமான நிலையை உணர்ந்து, அவளே ஜாடையாகக் கூப்பிட்டான்.
'மாப்பிள்ளை வந்து நாளைக்குப் பேரன், பேத்தி எடுக்கப் போகிருய். எதற்கெடுத்தாலும் குழந்தைமாதிரி அழுதுகொண்டு நிற்கிருயே அம்மா. பாட்டி சொல்வதைக் காதில் வாங்காமல் உன் வேலையைக் கவனிக்க மாட்டாயா?' என்று சந்துரு அவளை அன்புடன் கடிந்துகொண்டான்.