பக்கம்:இருளும் ஒளியும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

அவளுக்கு அவ்வளவு சுதந்தரமா ?

பி. வீட்டார் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு அந்த வீட்டுச் சாப்பிடும் கூடத்தில் ஒரே இரைச்ச லும், சிரிப்புமாக இருந்தது. எப்பொழுதும் பிறருடைய குற்றங் குறைகளையே சிலர் ஆராய்ந்துகொண் டிருப்பார் கள். தங்களிடம் இருக்கும் ஒரு சிறு குறை கூட அவர்கள் மனதில் படுவதில்லை.

"ஆமாம், என்ன பிரமாதமாக வீடு கட்டிவிட்டான்? முக்கால் அடிச் சுவர் வைத்து சேற்றைப் பூசி ஒழுங்கு பண்ணி விட்டாளுக்கும்' என்று வாடகை வீட்டில் இருந்துகொண்டே வீடு கட்டுகிறவர்களைப் பழிக்கும் சுபாவமுடையவர்களை நாம் தினமும் சந்திக்கிருேம். எப்பொழுதும் எதற்கெடுத்தாலும் பிறரைப் பழிக்கும் சுபாவம் உடையவள் சாவித்திரி. எவ்வளவோ அருமையுடன் வளர்க்கும் பெற்ருே.ரிடமே அவளுக்குக் குறை உண்டு. அன்றும் வழக்கம்போல் சாப்பிட்டுக்கொண்டே ஆரம் பித்தாள் சாவித்திரி:

நானுந்தான்் பார்க்கிறேன். அந்தப் பெண் ஸரஸ்வதிக்கு என்ன அவர்கள் வீட்டில் அவ்வளவு சுதந்தரம்? வெட்கம் இல்லா மல் காலைச் சாய்த்துக்கொண்டு இவள் பெண் பார்க்க வரவில்லை என்று யார் அடித்தார்கள்?"

"ஆமாண்டி அம்மா, நானும் கவனித்தேன். 'அத்தான்். அத் தான்்' என்று வயசுவந்த பிள்ளையோடு என்ன குலாவல் வேண்டி இருக்கிறதோ!' என்ருள் பாட்டி. சாதாரணமாக ஏதாவது அகப் பட்டால் கூட கண், காது. மூக்கு வைத்துப் பேசுபவள் ஆயிற்றே பாட்டி? பேத்தியிடம் அதிக வாஞ்சை கொண்டவள் அவள். இந்த விஷயத்தில் மங்களத்துக்கும். பாட்டிக்கும் பல தகராறு களும், சண்டைகளும் கிளம்புவது அந்த வீட்டில் சர்வ சகஜம். 'சிறு குழந்தை மாதிரி உனக்கு யார் பேரிலாவது ஏதாவது சொல்லிக்கொண்டே யிருக்க வேண்டும். இந்த புத்தியை விட்டு

இ. ஒ. 2