19 க்கு அள்ளை வு சு கங் д тuг л o روسته به سوی
சாவித்திரிக்கு இல்லே. அவள் குழந்தைப் பருவத்தில் பாட்டியும், அம்மாவும் சண்டை பிடித்துக்கொண்டதெல்லாம் பசுமரத்தாணி போல் சாவித்திரியின் மனதில் பதிந்துபோ யிருந்தது. பாட்டி, அம் மாவை ஓட ஓட விரட்டியமாதிரி தான்ும் விரட்டினள். எடுத்
சற்கெல்லாம் 'ஹடம்' பிடித்தாள். அதைப் பாட்டியின் சலு ை.யால் சாதித்துக்கொண்டாள்.
ராஜமையர் சாவித்திரியைக் கடிந்துகொண்ட பிறகு
சிறிது நேரம் எல்லோரும் மெளனமாகச் சாப்பிட்டுக்கொண் டிருந்தனர். சாவித்திரிக்குக் கோபம் என்பதை எல்லோரும்
புரிந்துகொண் டி ருந்தார்கள். 'கடு கடு' வென்று முகத்தை வைத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் அவள் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்த சீதா, 'யாருக்குப் பிடிக்கிறதோ
இல்லையோ. எனக்கு ஸரஸ்வதியை ரொம்பவும் பிடிக்கிறது. சிரித்துச் சிரித்துக் கபடம் இல்லாமல் பேசுகிருளே என்ருள். 'உனக்கு யாரைத்தான்் பிடிக்காது? எல்லோரையும் பிடிக்கும்!'" என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டுச் சாப்பிடும் தாலத்தை "நக் கென்று நகர்த்திக்கொண்டே அவ்விடம்விட்டு எழுந்தாள் சாவித்திரி.
இதுவரையில் இவர்கள் சச்சரவில் தலையிடாமல் இருந்த
மங்களம் சலிப்புடன், என்ன சண்டை இது, சாப்பிடுகிற வேளையில்? அரட்டை அடிக்காமல் ஒரு நாளாவது சாப்பிடுகிறிர் களா?' என்று கோபித்துக்கொண்டாள். அதற்குமேல்
எல்லோரும் கப்சிப்பென்று அடங்கிவிட்டார்கள்.
ராஜமையர் வெற்றிலைக்குச் சுண்ணும்பைத் தடவியபடி சமையற்கட்டில் வந்து மங்களத்தின் எதிரில் உட்கார்ந்துகொண் டார். சிறிது பொறுத்து, வர வர உனக்கு என்னைக் கவனிக்கவே அவகாசம் இல்லாமல் போய்விட்டது மங்களம்: சாப்பிட்டு கை அலம்புகிறதற்கு முன்னடியே தயாராக வெற்றிலை மடித்து வைத்துக்கொண்டு காமரா அறையில் வந்து நிற்பாயே. இப்பொழுது என்னடாவென்றால் பாக்கு, வெற்றிலை, சுண்ளும்பு மூன்றையும் தேடி நானே எடுத்துப் போட்டுக்கொண்டு உனக்கும் தட்டில் வைத்துக்கொண்டு வந்து கொடுக்க வேண்டியிருக்கிறது. என்று பாதி நிஷ்டுரமாகவும் பாதி கேலியாகவும் கூறிஞர்.
மங்களமும் பொய்க்கோபத்துடன் அவரைப் பார்த்து. ""நாளைக்கே மாப்பிள்ளை வரப்போ கிருன். பிறகு நாட்டுப் பெண் வருவாள். இன்னும் உங்களுக்கு நான் நடுங்க வேண்