G
வீளுகான լի
சாவித்திரி-ரகுபதி விவாகம் 'ஜாம், ஜாம்' என்று நடத்
தேறியது. பணத்தைப் 'பனம்' என்று பாராமல் செலவழித் தார் ராஜமையர். சந்துருவுக்கும். சீதாவுக்கும் இருந்த உற்பா
கத்தில் ஊரையே அழைத்துவிட்டார்கள். வந்தவ போனவர் களுக்கு ஒரு குறைவும் இல்லாமல், ஒடி ஆடி எல்லாவற்றையும் கவ னித்து வந்தாள் மங்களம். சம்பந்தி வர்க்கத்திலும், "நொட்டைச் சொல் சொல்ல யாரும் இல்லை. ஸ்வர்னமும், ஸரஸ்வதியும் இன்ப வெள்ளத்தில் மிதந்து திளைத்தனர். அவ்வளவு தடபுட லாகக் கல்யாணம் நடைபெறுவதில் அவர்களுக்குப் பரமதிருப்தி:
அன்று சித்திரை மாதத்துப் பெளர்ணமி. பால் போன்ற நிலவொளியில் அந்த ஊரும் அதன் சுற்றுப்புறங்களும் மூழ்கிக் கிடந்தது. அந்த ஊரில் பல இடங்களில் கல்யாணம். நாதஸ் வரத்தின் இன்னிசையும் நிலவின் குளுமையும், 'கம் மயன்று காத வழிக்கு வாசனை வீசும் மல்லிகை மலர்களுமாகச் சேர்ந்து ஸ்வர்க்கத்தில் இவ்வளவு இன்பம் உண்டா என்கிற சந்தேகத்தை எ ழு ப் பி ன. ராஜமையர், பூந்தோட்டத்திலிருந்து குண்டு மல்லிகையாகவே கல்யாணத்திற்கு வரவழைத்திருந்தார். கரு நாகம்போல் வளைந்து துவளும் பெண்களின் ஜடைகளின் மீது வெள்ளை வெளேர் என்று மணம் வீசும் மல்லிகையின் அழகு பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. முகூர்த்தத்தன்று இரவு விருந்துக்கு அப்புறம், கொட்டாரப் பந்தலில் ஊஞ்சலில் பெண்ணையும், பிள்ளையையும் உட்கார வைத்தார்கள். ஊஞ்சல் வேடிக்கையை ரசிப்பதற்கு ஆண்களைவிடப் பெண்களின் கூட்டமே வழக்கம்போல் அதிகமாக இருந்தது.
என்னடி இது? ஊஞ்சலில் அவர்களை உட்கார்த்திவைத்து விட்டு எல்லோரும் பேசாமல் இருக்கிறீர்கள்? நறுக்கென்று நாலு பாட்டுகள் பாடமாட்டிர்களோ' என்று கூறிவிட்டு 'கன்னுாஞ்சல் ஆடினரே, மீளுட்சி சுந்தரேஸ்வரர்' என்று இரண்டு கட்டை ஸ்ருதியில் பாட ஆரம்பித்தாள் பெரிய கமங்கலியாகிய ஒரு அம்மாள்.