விணு கானம் 27
யுவதிகள் கூட்டத்திலிருந்து கலீர் என்று சிரிப்பொலி எழுந்தது. பொங்கிவந்த சிரிப்பை வெகு சிரமப்பட்டுச் சீதா அடக்கிக்கொண்டு, 'ஸ்ரஸ்-! பாட்டுத் தெரிந்தும் பாடாமல் இருப்பவர்களுக்கு இதுதான்் சரியான தண்டனை! புரிந்ததா ..ணக்கு?' என்று கேட்டாள். ஊஞ்சல் பாட்டை அரைகுறை ாக நிறுத்திவிட்டு மறுபடியும் அந்த அம்மாள், லாலி-லாலய்ய லாலி' என்று ஆரம்பிக்கவே, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த ராஜமையர் சுவாதினமாக அவளைப் பார்த்து, 'அம்மாமி! வருகிற மாந்தான்ே மாமாவுக்குச் சஷ்டியப்த பூர்த்தி? ஜமாய்த்துத் தள்ளிவிடுவாய்போல் இருக்கிறதே!' என்று கேலி செய்தார்.
'போடா அப்பா! சிறுசுகள் எல்லாம் பாடாமல் உட்கார்ந் திருந்தால் கிழவிதான்ே பாடவேண்டும்?' என்று கூறி அந்தப் பாட்டையும் அரைகுறையாகவே நிறுத்திவிட்டாள். அந்த அம்மாள்.
இதற்குள்ளாகச் சந்துருவின் கண்கள் ஆயிரம் முறை லரஸ்வதியின் பக்கம் பார்த்து, "உன் கானத்தைக் கேட்பதற் காகவே தவம் கிடக்கிறேனே" என்று சொல்லாமல் சொல்லின. புன்னகை ததும்ப நிலத்தைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந் திருந்த ஸரஸ்வதி திடீரென்று நிமிர்ந்து பார்த்து, சாவித்திரி! பெண் பார்க்க வந்த அன்றே எங்களை எல்லாம் நீ ஏமாற்றி விட்டாய். அத்தான்ுடைய விருப்பப்படி என்னிடந்தான்் நீ பாட்டுக் கற்றுக்கொள்ளவேண்டும். ஏதோ ஒரு பாட்டு உனக்குத் தெரிந்தவரையில் பாடு பார்க்கலாம்' என்று கொஞ்சு தலாகக் கூறினுள்.
எதிலும் கலந்துகொள்ளாமல் எங்கோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சாவித்திரி, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். பிறகு கடுகடுவென்றிருந்த முகபாவத்தைச் சட்டென்று மாற்றிக் கொண்டு புன்சிரிப்புடன், 'எனக்குத் தெரியாது என்று அன்றே சொல்லி இருக்கிறேனே" என்ருள். -
'பேஷ், பேஷ். . . பாட்டு பாட்டு என்று மாய்ந்துபோனவ னுக்கு இந்த மாதிரி மனைவியா வந்து வாய்க்க வேண்டும்? ரொம்ப அழகுதான்் போ' என்று ரகுபதியின் அத்தை பரிகாசம் செய்யவே, சாவித்திரிக்கு ரோஷம் பொத்துக்கொண்டது. சிறிது அதட்டலாக, 'எனக்குப் பாடத் தெரியாது என்றால் பேசாமல் விட்டுவிட வேண்டும். இது என்ன தொந்தரவு?' என்று கூறி முகத்தை "உர் ரென்று வைத்துக்கொண்டாள்.