பக்கம்:இருளும் ஒளியும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

לס

து

ரகுபதியின் கடிதம்

கல்யாணத்துக்கு அப்புறம் சில தினங்கள் வரையில் எல்லோரும் ஏக மனதாக ஸரஸ்வதியின் சங்கீத ஞானத்தைப் புகழ்ந்துகொண் டிருந்தார்கள். அவள் "கலீர், கலீர் என்று

சிரித்தது. குறும்புத்தனம் நிறைந்த அவள் அழகிய முகம், மைதிட்டிய பேசும் விழிகள், கபடமற்ற எளிய சுபாவம் முதலி யவை. சந்துருவின் மனதில் அழியாத ஒவியமாகப் பதிந்து விட்டன. தனிமையில் உட்கார்ந்து அவன் மான சிகமாக ஸரஸ் வதியை நினைத்து. நினைத்துப் பார்த்துக் களிப்பெய்தின்ை. அவளைப்பற்றி வீட்டிலே யாராவது பேசிக்கொண் டிருந்தால் ஆனந்தம் பொங்க அங்கு நின்று அதை முற்றும் கேட்டு விட்டுத்தான்் நகருவான். படிக்கும்போது ஒருவருக்கும் தெரி யாமல் காகிதத்தில், ஸரஸ்வதி, ஸரஸ்வதி' என்று எழுதிப் பார்ப்பதில் அவன் மனம் திருப்தியடைந்தது.

கல்யாண மெல்லாம் கழித்து, பாலம் டில்லிக்குப் புறப்படு வதற்கு முதல் தினம் சாப்பிடும் கூடத்தில் உட்கார்ந்து எல்லோரும் பேசிக்கொண் டிருந்தனர். சீதா. கல்யாண அவ சரத்தில் ஸரஸ்வதியிடமிருந்து புதுப் பாட்டுகளாக இரண்டு கற்றுக்கொண் டிருந்தாள். பூஜை அறையில் அவள் தம்பூரை மீட்டி அதைப் பாடும்போது சந்துரு அங்கு வந்துசேர்ந்தான்். பாட்டைச் சிறிது நேரம் கேட்டுவிட்டு அவன், 'இந்தப் பாட்டில் தான்ே அநுபல்லவியில் நிரவல்' செய்தாள் ஸ்ரஸ்வதி? அபார மாக இருந்தது. இப்பொழுதுகூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது சீதா' என்ருன் அவன்.

'செதுக்கி எடுத்த சிலை மாதிரி மூக்கும், விழியும், பாவம், பச்சைக் கிளிமாதிரி இருக்கிறது அந்தப் பெண்: கால்கூட அப்படி ஒன்றும் ஊனம் இல்லை; வெளியிலே ஒன்றும் தெரியவில்லை. ஒர்ே பிடிவாதமாகக் கல்யாணமே வேண்டாம் என்கிருளாமே. நான்கூட என் மைத்துனனுக்குப் பண்ணிக்கொள்ளலாம் என்று சம்பந்தி அம்மாளை விசாரித்துப்பார்த்தேன்' என்ருள்.

L/IT Gl) Lг),