பக்கம்:இருளும் ஒளியும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

tபொருமை

ரகுபதியின் குடும்பத்தார் வசித்து வந்த ஊர், இராமாந்தர வர்க்கத்தைச் சேர்ந்ததல்ல. நூறு பிராம்மணக் குடும்பங்களும் மற்ற வகுப்புக் குடும்பங்கள் ஐநூறும் வாழ்ந்த அந்தச் சி. ற் று. ரி ல் ஒரு பெரிய பள்ளிக் கூடமும், தபாலாபீஸும், அழகிய கோவிலும் இருந்தன. அவ்வூரில் வசித்துவந்த பிராம்மணக் குடும்பங்களில் பெரும் பாலோர் நல்ல ஸ்திதியில் இருப்பவர்கள். ரகுபதியின் தகப்பனர் அவன் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். ஊர் ஜனங்கள் நல்லவர்களாக இருந்ததால் பால்ய விதவையான ஸ்வர்ளும்பாள் ஒருவித வம்புக்கும் ஆளாகாமல் அந்த ஊரிலேயே காலம் தள்ளிவந்தாள். ரகுபதி தாய்க்கு அடங்கிய பின் கள. ஆனல், தாயார்தான்் பிள்ளை கு அடங்கி நடந்துவருவதாகச் சொல்லும்படி இருந்தது. பெரிய படிப்பெல்லாம் படித்துத் தேறிவிட்டு ரகுபதி வேலைக்குப் போகா மல் வீட்டுடன் இருந்தான்். சிறு வயதில் ஸ்வர்னம்பாள் நன்ருகப் பாடுவாள். அவள் குரலினிமைக்கு ஆசைப்பட்டே ரகுபதியின் தகப்பனர் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண் டாராம். அவரும் சங்கீதப் பித்துப்பிடித்த மனுஷன். இந்தக் காலத்தைப்போல் சங்கீத சபைகளும், நாடக மண்டலிகளும் அப்பொழுது அவ்வளவாக இல்லை. நல்ல சங்கீதத்தைக் கேட்க வேண்டுமானல் கோயில்களின் உற்சவகாலங்களிலும், பெரிய மனிதர்கள் வீட்டுக் கல்யாணங்களிலுமே முடியும். பெரிய வித்வான்களை அழைத்துக் கோயிலில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்வதோடு, அவர்களைத் தம் வீட்டிலேயே அழைத்து வேண்டிய செளகர்யங்களைச் செய்து கொடுப்பார் ரகுபதியின் தகப்பனர். அவருக்கு வாய்த்திருந்த மனைவியும் அவர் எடுத்த காரியத்தில் பங்கெடுத்துக்கொண்டு சண்டை, பூசலுக்கு இடம் இல்லாமல் நடந்துகொண்டாள். பரம்பரையாக இருந்துவந்த சங்கீத ஞானம் ரகுபதியையும் பிடித்துக்கொண்டது. அவனும்

இ. ஒ. 3