பக்கம்:இருளும் ஒளியும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S)

மனித சுபாவம்

கன்னங்களில் வழிந்த கண்ணீைரைத்தான்் ரகுபதியின் கரங் கள் துடைத்தன. சாவித்திரியின் மனதில் ஏற்பட்டிருக்கும் குறையை - சந்தேகத்தை - பொருமையை அவல்ை துடைக்க முடியவில்லை! மனிதன், அல்ப சந்தோஷி' என்று பெரியவர்கள் கூறுகிரு.ர்கள். கல்யாணம் முடிந்தவுடன் மனைவியின் விருப்பப் படி கணவன் நடப்பதோ, கணவனின் விருப்பப்படி மனேவி நடப்பதோ இயலாத காரியம். வெவ்வேறு குடும்பத்திலிருந்து தெய்வ ஆக்ஞையால் சேர்க்கப்பட்ட இருவரின் உள்ளங்களும் ஒன்றுபடச் சில வருஷங்களாவது அவகாசம் வேண்டி இருக்கும். சாவித்திரி அந்த வீட்டுக்கு வந்ததும் அங்கு ஸரஸ்வதிக்கு அளித் திருக்கும் உரிமையைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். பீரோவி லிருந்து அத்தான்ுடைய கைச் செலவுக்குப் பணங்கூட அவள்தான்் எடுத்துக் கெ. பத்தாள். வரவு-செலவைக் கணக்கெழுதி வைத்தாள். ஸரஸ்வதிக்கு என்று சங்கீத சபைகளில் ஒன்றுக் குப் பத்தாகப் பணம் செலவழித்துக் கச்சேரிகளுக்கு ரகுபதி டிக்கெட்டு கள் வாங்கிஞன். தன் கணவன் இப்படிச் செலவழிப்பதை சாவித்திரி ஒரு குற்றமாக எடுத்துக்கொண்டாள். என்னதான்் தகப்பனர் மாதந்தோறும் ஸரஸ்வதிக்காகப் பணம் அனுப்பின லும், பணத்தில் ' என்னுடையது உன்னுடையது' என்று எங்கே வித்தியாசம் தெரிகிறது? ரகுபதி வெளியே சென்று விட்டு வீடு திரும்பும்போது சாவித்திரி, கணவன் மீது ஏற்பட்ட கோபத்தால் அவன் வந்ததைக்கூட லட்சியம் செய்யாமல் தன் அறையில் கதவைச் சார்த்திக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். வேலை செய்து களைத்துப்போய் ஸ்வர்ணம் படுத்துத் துரங்கிவிடுவாள். அப் பொழுதெல்லாம் ஸரஸ்வதி அத்தான்ுக்குப் பரிந்து உபசரித்துக் காபி கொடுத்து, உணவு பரிமாறி, கவனித்துக் கொள்வாள். "அவள் ஏன் அதைச் செய்யவேண்டும்? அவனுடையவள் என்று உரிமை பாராட்ட ஒருத்தி இருக்கும்போது ஸரஸ்வதிக்கும், இன்னெருத்திக்கும் அந்த இடத்தில் என்ன வேலை இருக் கிறது? "எனக்குச் சாதம் போட வா' என்று கணவன்