பக்கம்:இருளும் ஒளியும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இருளும் ஒளியும்

மகுடி ஊதுவதைத் திடீரென்று நிறுத்தியதும் சிறும் சர்ப்பம்போல் சாவித்திரி 'விசுக் கென்று அவன் மடியிலிருந்து எழுந்தாள். o

'எனக்கு எல்லாம் தெரியும். கல்யாணத்தின்போதே எனக்குத் தெரியுமே! மணிக் கணக்கில் ஸ்ரஸ்வதியைப் பாடச் சொல்லிவிட்டு நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்திர் களே! மறந்து போய்விட்டேன் என்ரு பார்த் தீர்கள்? மறக்க வில்லை!" என்றுகோபமும், பரிகாசமும் தொனிக்கக் கூறிவிட்டு சாவித்திரி அவனிடமிருந்து ஒதுங்கி உட்கார்ந்துகொண்டாள். டரகுப்தி பொறுமையை இழக்து மல் சாவித்திரியைப்

பார்த்து. "என்னவோ சம்பந்தம் ல்லாமல் பேசுகிருயே! அயலாரிடம் உன்னைப் பாட்டுக் கற்றுக்கொள்ளச் சொல்ல வில்லையே! ஸரஸ்வதி நம் வீட்டு மனுவதிதான்ே?' என்று கேட்டான். -

"'உங்கள் ஸரஸ்வதி எனக்கு ஒன்றும் வாத்தியார் ஆக வேண்டாம். அந்தப் பெருமை எல்லாம் உங்களோடு இருக் கட்டும். எனக்குப் பாட்டும் வேண்டாம் கூத்தும் வேண்டாம். எனக்கு இஷ்டமில்லாத விஷயத்தை வற்புறுத்த வேண்டாம். என் பிறந்த வீட்டிலேயே என்னை யாரும் எதற்கு ம் வற்புறுத்த மாட்டார்கள். ஆமாம். .' என்று படபடவென்று பேசிவிட்டுப் படுக்கை அறைக்குள் சென்று கட்டிலின் மீது "பொத் தென்று உட்கார்ந்து கொண்டாள்.

வெளியே சென்று வந்த கணவன் சாப்பிட்டாளு என்று விசாரிக்கவேண்டும் என்றுகூட அவளுக்குத் தோன்றவில்லை. ரகு பதி சப்பிட்ட மனத்துடன் படுக்கை அறையில் நுழைந்து அன்று வந்த தினசரி ஒன்றைப் படிப்பதில் முனைந்தான்். மேஜைமீது வைக்கப்பட்டிருந்த பால் ஆறிப்போயிருந்தது. சிறிது நேரம் கணவனையே உற்றுப் பார்த்துக்கொண் டிருந்த சாவித்திரி கிழே ஸரஸ்வதி பாட்டை முடித்ததும். 'அப்பாடா! பாதி ராத்திரி வரைக்கும் பாட்டும் கதையும்! துா...' என்று கூறிக்கொண்டு. போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். மனைவி தன்னை இவ்வளவு உதாசீனம் செய்வாள் என்று ரகுபதி: எதிர்பார்க்கவில்லை. ஆகவே, கோபமும், வெட்கமும் நிறைந்த மனத்துடன் அவள் அறைக்கு வெளியே வராந்தாவில் யோசித்த படி குறுக்கும். நெடுக்குமாக உலாவும்போது கீழே ஸரஸ்வதி மங்கிய விளக்கொளியில் படுக்கையை உதறிப்போட்டுக்கொண்டு