பக்கம்:இருளும் ஒளியும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இருளும் ஒளியும்

ஸ்ரஸ்வதி சிரித்துக்கொண்டே அவனிடமிருந்து விலகிப் போகிருள்.

ஸரஸ்வதி உன்னிடம் ஒரு குறையும் இல்லை. அற்ப விஷயம் அது. நான் அதைப் பாராட்டுகிறவன் அல்ல, ஸ்ரஸ் வதி' என்று சந்துரு உண்மை ஜ்வலிக்கும் பார்வையுடன் அவளிடம் கூறுகிருன்:

ஸரஸ்வதி திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். சாவித் திரியைப் புக்ககத்துக்கு அழைத்து வந்தபோது சந்துரு அவளைத் தனிமையில் சந்தித்துப் பேச எவ்வளவோ சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டாலும் ஸரஸ்வதி அதற்கு இடங்கொ. மல் உறுதியுடன் இருந்தாள்.

‘'தோ உன்னை எங்களுடன் அழைத்து வரச் சொன்னுள்" என்று மங்களம் கூப்பிட்டபோது, 'ஆகட்டும் மாமி, வரு கிறேன். சீதாவைத்தான்் இங்கே அனுப்பிவையுங்களேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினுள் ஸரஸ்வதி.

இது என்ன கனவு: கனவில் காண்ப தெல்லாம் வாழ்க்கை யில் உண்மையாக நடக்குமா? நடந்தாலும் நடக்கலாம். நடக்காமல் போனலும் போகலாம்; அவள் படுக்கை அறைக்கு எதிரில் பூஜை அறை இருந்தது. அன்று அறைக்கதவு சார்த்தப் படாமலேயே திறந்திருந்தது. உள்ளே பூஜையில் மாட்டியிருந்த நடராஜனின் உருவப்படம் லேசாகத் தெரிந்தது. காலத்துக்கி நின்ருடும் தெய்வ'த்தின் கலை அழகைக்கண்டு ரசித்தாள் ஸரஸ்வதி. உன்னதமான கலேயைத் தனக்கு அருளி இருக்கும் 'அவன் தன்னைக் கேவலம் இந்த உலக இன்பங்களில் சிக்க வைக்கமாட்டான் என்கிற உறுதியும் கூடவே ஸரஸ்வதியின் மனதில் உதித்தது. இருந்தாலும் திடீர் திடீர் என்று சந்துருவின் நினைவு அவளுக்கு ஏன் தோன்றவேண்டும்? மனித சுபாவம் அப்படித்தான்் என்று புரிந்துகொள்ளவில்லை ஸரஸ்வதி.