பக்கம்:இருளும் ஒளியும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இருளும் ஒளியும்

தாம்பத்ய உறவில் உள் ளம் இரண்டும் ஒன்று சேர்ந்து உறவாடுவதுதான்் இன்பம். சாவித்திரி தினம் இரவு நேரத்தில் பால் டம்ளருடன் படுக்கை அறைக்குள் நுழைவாள். 'நக்" கென்று அதை மேஜை மீது வைத்துவிட்டுப் படுக்கையில் 'பொத்' தென்று சாய்ந்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விடுவாள்.

ரகுபதி ஒரு சங்கிதப் பித்தன். இரவில் நகரத்தில் சங்கிதக் கச்சேரி கேட்டுவிட்டு விடு திரும்பும்போது பொழுதாகிவிடும். விடு திரும்பும் கணவனே மலர்ந்த முகத்துடன் சாவித்திரி வரவேற்க மாட்டாள். கூடத்தில் அயர்ந்து துரங்கிக்கொண் டிருக்கும் ஸ்வர்ணத்தை எழுப்புவதற்கு ரகுபதிக்கு மனம் வராது. ஸ்ரஸ்வதியைக் கூப்பிட இனி, அவள் யார்? அவன் யார்? தளர்ந்த மனத்துடன் ரகுபதி, மாடிக்குப் போய்ச் சாவித்திரியை அழைக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் படி களில் ஏறும்போது தடதடவென்று சாவித்திரி மாடிப் படிகளில் இறங்கி வேகமாக அவனைத் தாண்டிச் செல்வாள். அப்ப! ஒரு ஸ்திரீக்கு அகங்காரமும், கோபமும் ஏற்படும்போது உண்டாகும் வேகம் ஒர் அணுகுண்டுக்குக்கூட இருக்காது என்று சொல்ல லாம்! அடுத்தாற்போல சமையலறைக் கதவைப் பட் டென்று திறந்து சாப்பிடும் தட்டை "நக் கென்ற ஒசையுடன் வைத்து விட்டு உறுமும் பெண் புலியைப்போல் காத்து நிற்பாள் சாவித்திரி. உங்களுக்குச் சாதம் போடும் வேலை ஒரு கடன்" என்று சொல்லுகிற மாதிரி இருக்கும் அவள் செய்கைகள் எல்லாம். குமுறும் எண்ணங்களை வார்த்தைகளில் கொட்டித் தீர்த்துவிட்டாலும் பரவாயில்லையே! எண்ணங்கள் மனத்துள் குமுறக் குமுற, எழப்போகும் அனல் விபரீதமாக அன்ருே இருக்கும்? குமுறும் எரிமலையை எவ்வளவு காலந்தான்் அடக்கி வைக்க முடியும்?

ரகுபதி சாப்பிட்டு முடித்தவுடன் குடிப்பதற்கு ஜலம் தேவை யென்று டம்ளரைச் சற்று நகர்த்தி வைப்பான். அதை கவனியா தவள்போல் சாவித்திரி 'விர் ரென்று மாடிப் படிகளில் ஏறி அறைக்குள் சென்றுவிடுவாள். வேதனையும், கோபமும் நிறைந்த மனத்துடன் ரகுபதி அறைக்குள் சென்று ஏதாவது புஸ்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவான்.

இப்படியே மேலும் இரண்டு மாதங்கள் சென்றன. இல்வாழ்க்கை ஆரம்பமானவுடன் பாலில் சொட்டுப் புளி விழுந்