வானம்பாடி' 47
மாதிரி இருந்தார்கள். அவள் மறைவுக்குப் பிறகுதான்் வர்ணத்தின் தமையன் மனம் வெறுத்து எங்கோ இருக்கிருன். பெற்ற பெண்ணைப்போல் வளர்த்த ஸரஸ்வதியைப் பிரிந்து ஸ்வர்ணத்தால் இருக்க முடியுமா?
ஸ்வர்ணம் ஆழ்ந்த யோசனைக்கு அப்புறம் பெருமூச்சு விட்டாள். பிறகு அங்கு நிலவி இருந்த அசாதாரணமான அமைதியைக் கலைத்துக் கனிவுடன், 'உனக்கு இங்கே என்ன கஷ்டம் ஸ்ரஸு?' என்று கேட்டாள் ஸரஸ்வதியைப் பார்த்து.
'கஷ்டம் ஒன்றுமில்லை அத்தை. எனக்கும் வெளி ஊர்க ளெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. கொஞ்சகாலம் அப்படித்தான்் பார்த்துவிட்டு வருவோமே என்று தோன்றுகிறது' என்று வெகு சாமர்த்தியமாக மனக் கஷ்டத்தை மறைக்க முயன்ருள் ஸரஸ்வதி.
ஸ்வர்ணத்தின் இளகிய மனதால் அதற்குமேல் நிதான்மாக இருக்க முடியவில்லை. கண்களில் கண்ணிர் பெருக ஸரஸ்வதி யைச் சேர்த்து அனைத்துக்கொண்டு, 'அம்மா! திடீரென்று ஊருக்குப் போகிறேன் என்று சொல்லுகிருயே, உன்னை அனுப்பி விட்டுத் தனியா இந்த வீட்டில் எப்படி இருப்பேன் சொல்?' என்ருள் ஸ்வர்ணம். ஸரஸ்வதி அத்தையின் கைகளை ஆசை யுடன் பற்றிக்கொண்டு, "நீயும் அத்தான்ும் அடிக்கடி என்னைக் கல்யாணம் செய்துகொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே! கல்யாணம் ஆன பிறகு புக்ககம் போக வேண்டாமா அத்தை? இதற்கே இப்படிப் பிரமாதப்படுத்துகிருயே நீ?' என்று கண்ணேச் சிமிட்டிக் குறும்புத்தனமாகப் பார்த்துக்கொண்டே அத்தையைக் கேட் டாள்.
'அசட்டுப் பெண்ணே! அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?' என்று திகைப்புடன் தன்னைப் பார்க்கும் அத்தை யிடம், ஸரஸ்வதி ரகசியம் பேசும் குரலில், என்னுல் அத்தான்ுக் கும் சாவித்திரிக்கும் ஏதாவது சச்சரவு வந்துவிடும். நான் நன்ருகப் பாடுகிறேன் என்று சாவித்திரிக்குப் பொருமை போலிருக்கிறது. அதனல் அவர்கள் ஒருவருக்கொருவர் மன ஸ்தாபப்படுகிரு.ர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் சந்தோஷ. மாக இல்லாவிட்டால் உன் மனம் நிம்மதியாக இருக்குமா அத்தை?' என்று கேட்டாள்.