பக்கம்:இருளும் ஒளியும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 :

வினேயும் கண்ணிரும்

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. பூஜை அறையில் வழக்கம் போல் சுடர்விளக்கு ஏற்றிய பிறகு ஸரஸ்வதி வீணே வாசிக்க உட்கார்ந்தாள். இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடாமல் இட த வீணை டிரிங் கென்ற நாதத்துடன் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. அத்துடன் ஸ்வர்னம் அன்று காலையில் ஸரஸ் வதியைப் பார்த்து. 'அம்மா ஸரஸ்-! சங்கீதம் என்பது சாமான்ய வித் தையல்ல. தெய்வ கடாகத்தால் சித்திக்கும் அபூர்வக் கலை அது. அத்தெய்வீகக் கலேயை ஒருத்தருக்காக உதாசீனம் செய்வது நல்லதில்லை. நீ வினையைத் தொட்டு

மாதக்கணக்கில் ஆகிறதே. சாயங்காலம் விளககேற்றிய பிறகு இரண்டு பாட்டாவது வாசி கேட்கலாம்' என்று கூறிள்ை.

'வாஸ்தவந்தான்்! சா வி த் தி ரி க்கு ப் பிடிக்காவிட்டால் அவளுக்காக நமக்குத் தெரிந்த கலையை உதாசீனம் செய் வானேன்?" என்று எண்ணமிட்டாள் ஸரஸ்வதி. ஆகவே, அன்று மாலை தூசுபடிந்து கிடந்த வீணேயைத் துடைத்து எடுத்து வைத்துக்கொண்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்தாள் ஸரஸ்வதி. சாவித்திரியும், ஸ்வர்ணமும் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். படங்களுக்குப் போட்டிருந்த மல்லிகை மாலைகளின் மணமும், ஊதுவர்த்தியின் சுகந்தமும் சேர்ந்து அந்த இடத்தில் ஒரு தெய்வீகக் களையை ஏற்படுத்தின. நீர் ஊற்றுப்போல் கிளம்பும் நாத வெள்ளம் எல்லோரையும் மெய்மறக்கச் செய்தது. காம் போதி ராகத்தை விஸ்தாரமாக ஆலாபனம் செய்து தான்ம் வாசித்த பிறகு, "பூரீ சுப்ரமண்யாய நமஸ்தே' என்கிற கிருதியை ஸ்ரஸ்வதி வீணையில் வாசித்து, மதுரமாக குரலில் பாடினள். இதுவரையில் அவள் பாட்டிலேயே லயித்துப்போய் உட்கார்ந்தி ருந்த ஸ்வர்ணம், 'ஸரஸு! உன் அத்தான்் இன்று இந்தப் பாட்டைக் கேட்க இங்கே இல்லையே? நேற்றுகூட, 'ஏனம்மா! ஸ்ரஸ்வதி இப்பொழுதெல்லாம் பாடுகிறதேயில்லை' என்று

என்னிடம் கேட்டான்' என்ரு ன்.

இ. ஒ. 4