12
ரகுபதியின் கோபம்
மாடிக்குச் செல்லும் மனைவியைச் சற்றும் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ரகுபதி, கோபத்துடன் மனைவியை 'சாவித்திரி! சாவித்திரி!' என்று இரைந்து கூப்பிட் டான். ஸரஸ்வதி பயந்துபோய் முகம் வெளுக்க ரகுபதியின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்ருள். அவன் கூப்பிட்ட தற்கு மாடியிலிருந்து பதில் ஒன்றும் வராமற்போகவே திடுதிடு வென்று மாடிப்படிகளில் ஏறிஞன் ரகுபதி. அவன் பின்னல் சென்ற ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும் சாவித்திரியைப் பார்த்து விட்டு ஒரு கணம் திகைத்து நின்றார்கள். பிறகு ஸ்வர்ணம் பொங்கி எழும் கோபத்தை அடக்கிக்கொண்டு, 'நன்முக இருக்கிறது சாவித்திரி! வெள்ளிக்கிழமையும் அதுவுமாக!' என்ருள்.
சாவித்திரி! இதென்னம்மா இப்படி அழுகிருய்? எழுந்திரு' என்று அவள் கரங்களை அன்புடன் பற்றினுள் ஸ்ரஸ்வதி.
சாவித்திரி கண்ணிர் வழியும் முகத்துடன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு ஆத்திரம் தொனிக்க, ' என் பிறந்த வீட்டில் கூட என்னை யாரும் வற்புறுத்தமாட்டார்கள். இங்கே . . . .' என்று மேலும் கூருமல் தேம்பித் தேம்பி அழுதாள்.
ரகுபதிக்குச் சற்று தணிந்திருந்த கோபம் பீறிட்டு எழுந்தது.
'இங்கே உன்னை வாணலியில் போட்டு வதக்கி, தாலத்தில் எடுத்துவைக்கிருர்கள்! நீ பிறந்த வீட்டில் சுதந்தரமாக வளர்ந்த லக்ஷணம்தான்் இப்போது தெரிகிறதே!' என்று கேலியும், ஆத்திரமும் கலந்த குரலில் கூறினன் ரகுபதி.
"'என்ன தெரிகிறதாம்?' என்று கணவனைப் பதில் கேள்வி கேட்டு மடக்கிவிட்டதாக நினைத்து, நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் சாவித்திரி. ---