பிறந்த வீட்டுக்கு 59
உதடுகள் துடிக்க அவனே நீர் மல்கும் விழிகளால் பார்த்துவிட்டு உள்ளே ஒடிவிட்டாள் ஸரஸ்வதி:
'ஐயோ பாவம் தாயில்லாக் குழந்தை! முரட்டுத்தனமாகக்
கிள்ளிவிட்டோமே. பார்த்து ஆறு கல் கூறவேண்டும்' என்று
அவளேத் தேடி ரகுபதி சென்றபோது அவளாகவே வலுவில்
權
எதிரில் வந்து, 'அத்தான்்! காப்பி சாப்பிடாமல் மறந்து போய் விட்டாயே இன்றைக்கு. ஆறிப்போகிறதே' என்று கடச்சுட காபியை எடுத்துவந்து அவன் கையில் கொடுத்தாள். ரோஜாக் கன்னம் இன்னும் சிவந்துதான்் இருந்தது. கிள்ளி, விட்டேனே. வலிக்கிறதா?' என்று கேட்க அவனுக்கு வெட்கம். 'நீதான்் கிள்ளிளுயே!' என்று மறுபடியும் அந்த சம்பவத்தை நினைவுபடுத்த அவளும் வெட்கிகு ள்.
நேற்று ரகுபதி மனைவியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, 'அடித்து விட்டேனே' என்று மனம் வருந்தியபோது சாவித்திரி அதைப் பாராட்டவில்லை அல்லவா? 'அடிப்பதை அடித்தாயிற்று. இனிமேல் என்ன குலாவல் வேண்டி இருக்கிறது என்கிற தோரனேயில் உதாசீனமாகத்தான்ே பேசினுள்?
ரகுபதி சாம்பிய மனத்துடன் வீட்டை அடைந்தான்். யந்திரம்போல ஒருவருடனும் பேசாமல் தன் வேலைகளைக் கவனித்துக்கொண்டான். ஸ். வ ர் ண மு. ம், எஸ் ரஸ்வதியும் அவனுடன் ஒன்றுமே பேசவில்லை. அவளுகவே ஏதாவது பேசட்டும் என்று ஸ்வர்ணம் நினைத்தாள். அத்தான்ிடம் ஏதா வது வலுவில் பேசி அவன் மனப் புண்ணைக் கிளறக்கூடாது என்று ஸரஸ்வதி மெளனமாகவே இருந்துவிட்டாள். . இந்த அசாதாரணமான சாந்தம் அவன் நெஞ்சைப்பிடித்து உலுக்கியது. ஏன் ஒருவரும் தன்னுடன் பேசவில்லை என்று அவனுக்கு வியப் பாகவும் இருந்தது. ஒரு வேளை சாவித்திரியை அடித்தது ஒரு மாபெரும் குற்றம் என்று எல்லோரும் கருதுகிருர்களோ? குற்றமாக இருந்தாலும், பிறகு அவளை எவ்வளவு முறை சமாதான்ப்படுத்த முயன்ருன்? மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நான் கெஞ்சினேன்' என்று ஒருவனுக்கு பெற்ற தாயிடம் மட்டும் சொல்லிக்கொள்ள லஜ்ஜையாக இராதா என்ன? உடன் பிறந்தவளைப்போல் ஸரஸ்வதி பழகினலும் இந்த விஷயங்களையெல்லாம் அவளிடம் வாய்விட்டுச் சொல்ல முடியுமா? 'ஒருவனுக்கு ஏற்படும் சில உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு 'அந்த ஒருத்தி'தான்் தேவையாகவிருக்கிறது.