60 இருளும் ஒளியும்
தாயாக இருந்தாலும், உடன்பிறப்பாக இருந்தாலும், தோழனுக இருந்தாலும் மற்றவர்களால் பகிர்ந்துகொள்ள முடியாத சில உணர்ச்சிகளை சகதர்மிணி ஒருத்தியால்தான்் வாழ்க்கையில் பகிர்ந்துகொள்ள முடியும். இதையொட்டித்தான்் பெரியவர்கள் மனைவியைச் சகதர்மினி' என்று பெயரிட்டு அழைக்கிருர்களோ" என்று நினைத்து ரகுபதி மனம் வருந்தின்ை.
இப்படியே நாலைந்து தினங்கள் ஓடிவிட்டன. பிள்ளேயின் இந்த அசாதாரணமான மெளனத்தைப் பொறுக்க முடியாமல் ஸ்வர்ணம் ரகுபதியைப் பார்த்து, 'ஏண்டா! சாவித்திரி எப்பொழுது வருகிறேன் என்று சொன்னுளடா? கேட்டாயோ அவளே' என்று கவலையுடன் விசாரித்தாள். இந்த நாலைந்து தினங்களுக்குள்ளாகவே ஊரில், சாவித்திரி திடீரென்று பிறந்தகம் சென்றதைப்பற்றியே பேச்சாக இருந்தது.
'நேற்றுக்கூட ஸ்வர்ணத்தைக் கோவிலில் பார்த்தேன். நாட்டுப்பெண் ஊருக்குப் போகிறதைப்பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே' என்று அவயம் ஆச்சரியப்பட்டாள்.
' வர வர ஸ்வர்ணம் முன்னைப்போல் இல்லையடி. எந்த விஷயத்தையும் பூட்டிப் பூட்டி வைத்துக்கொள்கிருளே பத்திர மாக!' என்று பாகீரதி அம்மாமி முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டு அவயம் கூறியதை அப்படியே ஆமோதித்தாள். இப்படி கோவிலிலும், குளக்கரையிலும், நடுக்கூடங்களிலும் ஸ்திரி ரத்தினங்கள் பேசுவதை அரைகுறையாகக் கேட்ட ஸ்வர்ணம், மனக்கஷ்டம் தாங்காமல் பிள்ளையை மேற்கூறியவிதம் விசாரித் தாள். '
"எப்படிப் போளுளோ அப்படி வந்து சேருகிருள் இங்கே யாராவது அவளைப் போகச்சொன்னுேமா என்ன?" என்று தாயின் மீது சீறி விழுந்தான்் ரகுபதி.
'அவள்தான்் முரடாக இருக்கிருள் என்றால் நீயாவது தணிந்துபோகமாட்டாயா அப்பா? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மூலையைப் பார்த்துக்கொண்டு நின்றால் நன்ருக இருக்குமா?" என்ருள் ஸ்வர்ணம்.
அகம் குப் பதில் எதுவும் கூருமல் எழுந்துசென்ற ரகுபதியை மாடிப்படிகளில் சந்தித்த ஸரஸ்வதி கனிவுடன், 'அத்தான்்! சாவித்திரியிடமிருந்து ஊர்போய்ச் சேர்ந்ததைப்பற்றி கடிதம் ஏதாவது வந்ததா?' என்று கேட்டாள்.