# o r கொவின் உபதேசம் 65
'சிதா! நீ பேசாமல் இருக்கமாட்டாயா? உன்னை அதிகம் படிக்கவைப்பதே ஆபத்தாக முடியும்போல் இருக்கிறதே!' என்று ராஜமையர் அதட்டிய பிறகுதான்் அப்பாவும் விஷயத்தைப் பிரமாதப்படுத்த விரும்புகிருர் என்பதைச் சிதா தெரிந்துகொண் டாள்.
சாவித்திரியின் கல்யாணத்துக்காக ராஜமையர் ஆருயி ம் ரூபாய்க்குமேல் செலவு செய்திருக்கிரு.ர். விமரிசையாகக் கல்யாணம் செய்தார். மாப்பிள் 2.ா ரொம்பவும் நல்ல பிள்ளை என்று முடிவு கட்டியிருந்தார். பிக்கல், பிடுங்கல் ஒன்றும் இல்லை. பெண் சுதந்தரமாக வாழ்வாள் என்றும் எதிர்பார்த் தார். ஆனல், கல்யாணம் நடந்த நான்கு மாதங்களுக்குள் கணவனுடன் மனஸ்தாபப்பட்டுக்கொண்டு தன்னந்தனியே வந்து நிற்கும் மகளைப் பார்த்ததும், பொறுமைசாலியான அவர் மனமும் கோபத்தால் வெகுண்டது. எரியும் நெருப்புக்கு விசிறி கொண்டு விசிறுவதுபோல அவர் தாயார் மேலும் தொடர்ந்க. ஏண்டா அப்பா! குழந்தையை அடித்துத் துரத்தும் படி என்னடா கோபம் வந்துவிட்டது அவர்களுக்கு? சீர்வரிசைகளில் ஏதாவது குறைந்துபோய்விட்டதா? சாவித்திரிதான்் என்ன அழகிலே குறைவா? எதறகாக இந்தமாதிரி பண்ணியிருக்கி ருர்கள்?' என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டு அவரைத் திணற அடித்தாள்.
'பணம் காசைப்பற்றி என் மாமியார் வீட்டாருக்கு ஒருவிதக் குறையுமில்லை பாட்டி. அவர் இஷ்டப்படி நான் வீணை கற்றுக்கொள்ள வேண்டுமாம்! சங்கீதம் தெரிந்தவளாக இருந்தால்தான்் அவர் மனசுக்குப் பிடித்தமாக இருக்குமாம்!'" என்று பாட்டியின் கேள்விகளுக்குப் பதில் அளித்தாள் சாவித்திரி.
'அப்பா! இவ்வளவுதாளு? பேஷாகக் கற்றுக்கொள்கிறது. இதிலே சண்டைக்கும், சச்சரவுக்கும் இடமில்லையே. அப்படி உனக்குச் சங்கீதம் பயின்றும் வராமல்போல்ை அத்திம்பேர் தன்னுல் மனம் சலித்து விட்டுவிடுகிருர்' என்ருள் சீதா.
அடேயப்பா ! இதுதான் விஷயம்?' என்று மங்களம் ஒரு பெருமூச்சு விட்டாள். இதுவரையில் இவர்கள் பேச்சைக் கவனித்த சந்துரு உதட்டை மடித்துச் சிரித்துக்கொண்டே சீதாவைப் பார்த்தான்்.
'ஒருவேளை நாளைக் காலை வண்டியில் அத்திம்பேர் சாவித்திரியைத் தேடிக்கொண்டு வந்தாலும் வருவார்' என்று
இ. ஒ. 5