பக்கம்:இருளும் ஒளியும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இருளும் ஒளியும்

கொண்டிருக்கிறேன். வேருென்றும் இல்லை!" என்று சலிப்புடன் பதிலளித்தான்் அவன்.

'போ, அத்தான்். உன் மனசில் இருக்கிற ஏக்கந்தான்் முகத்திலேயே தெரிகிறதே. நான் என்ன பச்சைக்குழந்தையா?" என்று அவளும் வருத்தம் தொனிக்கக் கூறிஞள்.

'தான்் சந்தோஷப்படும்போது அவள் பார் த் து ச் சந்தோஷப்படவும், தான்் வருந்தும்போது அவள் வருந்தவும் ஸரஸ்வதிக்கும் தனக்கும் அப்படி என்ன பந்தம் இருக்கிறது: என்று ரகுபதி யோசித்தான்். ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு, எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்த கூந்தலைப் பின்னிவிடாமல், முதுகில் புரளவிட்டுக் கண்களில் கரைந்து இமைகளில் சற்று அதிகமாகவே வழியும் மையுடன் அவனைப் பார்த்து முறுவலித்துக்கொண்டே நின்ருள் ஸரஸ்வதி.

ஆர்வத்துடன் அவளை விழுங்கிவிடுவதுபோல் பார்த்துக் கொண்டே ரகுபதி, "உனக்குத்தான்் எப்படியோ பிறத்தியா ருடைய மனசில் இருப்பதைக் கண்டுபிடிக்கத் தெரிந்து இருக் கிறதே! என் மனசில் இருப்பதைத் தெரிந்துகொண்டே எதற்கு என்னைக் கேட்கிருய் ஸரஸு?' என்ருன்.

ஸரஸ்வதி வெட்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள். பிறகு சட்டென்று விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்து, 'உன்னேவிட அத்தைதான்் நாட்டுப்பெண் இன்னும் வந்து சேரவில்லையே என்று கவலைப்படுகிருள். நல்ல வேளை! நான் சமையலறையில் இராமல் இருந்தால் ரவா சொஜ்ஜியில் உப்பை அள்ளிப் போட்டிருப்பாள்: ஆனால் உனக்கு அதுவும் தெரிந் திருக்காது. இது ஏதோ புதுமாதிரி பட்சணம்போல் இருக்கிறது. என்று நினைத்துக்கொள்வாய். அத்தான்்! அன்றொரு நாள் சாவித்திரி பொரிச்ச கூட்டு என்று சமைத்து வற்றல் குழம்பை உன் இலையில் பரிமாறினளே! நீயும் அதைப் பேஷ் என்று சொல்லி ஆமோதித்துச் சாப்பிட்டாயே; நினைவிருக்கிறதா உனக்கு 'புருஷன், மனைவி வியவகாரத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும்' என்று நான். பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வெளியே போய்விட்டேன்' என்ருள் ஸ்ரஸ்வதி: பொங்கி வரும் சிரிப்பை அடக்க முடியாமல் அவள் "கலகல' வென்று சிரித்தபோது அந்தச் சிரிப்பின் ஒலி யாழின் இசை போலும், வேய்ங்குழலின் நாதம் போலும் இருந்தது ரகுபதிக்கு.