78 இருளும் ஒளியும்
மரியாதை என்பது இல்லையா?' என்று சற்றுக் கோபத்துடன் கூறினன் ரகுபதி.
அதற்குமேல் லரஸ்வதியால் ஒன்றும் பேச முடியவில்லை. ஏதோ ஒருவித ஏக்கம் மனத்தைப் பிடித்து அழுத்த அவள் அங்கிருந்து தன் அறைக்குள் சென்றுவிட்டாள். கற்றைக் கூந்தல் காற்றில் பறக்க மெதுவாக அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ரகுபதி, பெருமூச்செறிந்தான்். அவள் உள்ளே சென்ற பிறகுதான்், அவள் திறப்பு விழாவுக்கு என்ன பாடப் போகிருள் என்று கேட்காமல் போனதற்கு வருந்தினுன் ரகுபதி. அவள் எதிரில் தான்் உற்சாகம் குறைந்து இருந்தால், அவள் மனமும் வாடிப் போகுமே என்றும் நினைத்தான்். வாடிய உள்ளத்திலிருந்து கிளம்பும் பாட்டும் சோகமாகத்தான்ே இருக்கும்? இப்பொழுதெல்லாம் ஸரஸ்வதி அதிகமாகப் பாடுவதே யில்லை. ஏன் பாடுவதில்லை? ஒருவேளை அவன் வருத்தமாக இருக்கிருன் என்று நினைத்துப் பாடுவதையே விட்டுவிட்டாளோ? சீ. . . இனிமேல் அவள் எதிரில் ரகுபதி உற்சாகத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டான். மெது வாகத் தனக்குள் அவன், ' குழலோசை கேட்குதம்மா-கோபால கிருஷ்ணன் குழலோசை கேட்குதம்மா- ள்ன்று பாடுவதை ஜன்னல் வழியாக அறைக்குள்ளிருந்து இரு கமலநயனங்கள் பார்த்தன.
'நன்முகப் பாடுகிருயே அத்தான்். உனக்குப் பாட்டைக் கேட்கத்தான்் தெரியும் என்று நினைத்திருந்தேன். பாடவும் தெரிந்திருக்கிறதே' என்று ஸரஸ்வதி தன் மகிழ்ச்சியை உள். ளிருந்தே அறிவித்துக்கொண்டாள்.