பக்கம்:இருளும் ஒளியும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தப் பெண் யார்?' 81

ஷாம்பூ க்களாலும் அடையமுடியாத அடர்ந்த கூந்தலை அந்தப் பெண் பெற்றிருந்தாள். புளித்த பழைய அமுதும், ஒரொரு சமயங்களில் கேழ்வரகுக் கூழுமாகச் சாப்பிட்டதே அவள் கன் னங்களுக்குக் காஷ்மீரத்து ஆப்பிள் பழத்தின் நிறத்தை அளித் திருந்தன. சலியாத உழைப்பும், பரிசுத்தமான உள்ளமும் அவள் பெற்றிருந்ததால் கபடமற்ற முகலாவண்யத்தையும், வனப்பு மிகுந்த உடலமைப்பையும் பெற்றிருந்தாள்.

ஸ்ரஸ்வதி அழகுதான்். மேட்டூர் அணையில் தேக்கி சிறிது சிறிதாக வெளியே வரும் காவிரியின் கம்பீரமும் அழகும் ஸ்ரஸ்

வதியிடம் நிறைந்திருந்தன. "தலைக்காட் டில் உற்பத்தியாகிப் பிரவாகத்துடன் பொங்கிப் பூசித்துவரும் காவிரியைத் தங்கத்தின் அழகோடு ஒப்பிடலாம். காட்டு ரோஜாவிலிருந்து வீசும்

ஒருவித நெடியைத் தங்கத்தின் அழகில் உணரமுடியும். பன்னிர் ரோஜாவின் இனிமையான சுகந்தத்தை ஸரஸ்வதியின்

அடக்கமான அழகு காட்டிக்கொண் டிருந்தது.

வைத்த விழி வாங்காமல் கதவைப் பிடித்துக்கொண்டு தன்னையே உற்று நோக்கும் ஸரஸ்வதியைத் தங்கம் பார்த்து விட்டு, பயத்தோடும், லஜ்ஜையோடும் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

"எதற்காக இந்தப் பெண் இப்படி என்னைப் பார்த்துப் பயப்படுகிருள் அத்தை?' என்று ஸரஸ்வதி கேட்டுவிட்டு, 'தங்கம்! இங்கே வந்து உட்கார் அம்மா. நாங்களும் உனக்குத் தெரிந்தவர்கள்தாம். பயப்படாமல் இப்படி வா' என்று அன்புடன் அழைத்தாள். அதற்குள் அலமு. அத்தை ஸரஸ்வதி யைப் பார்த்து, "பயப்படவும் இல்லை, ஒன்றுமில்லை. நீ பெரிய பாடகி. கச்சேரியெல்லாம் பண்ணப்போகிருயாம். உன்னைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அழைத்துவந்தேன். கொஞ்சம் பழகிவிட்டால் 'லொட லொட வென்று பேச ஆரம் பித்துவிடுவாளே' என்ருள்.

'ஒஹோ! நான் கச்சேரி செய்யப்போவதைத் தெரிந்து கொண்டுதான்் அலமு. அத்தை வந்திருக்கிருளோ!' என்று ஸரஸ்வதி மனத்துக்குள் வியந்துகொண்டே, "அப்படியா?" என்று தன் மகிழ்ச்சியை அறிவித்துக்கொண்டாள்.

தங்கமும், ஸரஸ்வதியும் சில மணி நேரங்களில் மனம் விட்டுப் பழகிவிட்டார்கள். 'அக்கா, அக்கா என்று அருமை யாகத் தன்னைக் கூப்பிடும் அந்தப் பெண்ணிடம் ஸரஸ்வதிக்கு

இ. ஒ. 6