பக்கம்:இருளும் ஒளியும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.

இருளும் ஒவியும்

1.

வேதாந்தி

அன்று பகல் எல்லோரும் அடுத்த ஊருக்குப் பெண் ப ார் க் க ப் புறப்படுவதாக இருந்தார்கள். பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளே ஸ்வர்ணம் கவனித்துக்கொண் டிருந்தாள். பாதி விழிப்புடன் படுத் திருந்த ரகுபதியின் காதுகளில் வீணையுடன் இழைந்துவந்த மத்யமாவதி ராகம் விழுந்து பரவசமூட்டியது. மத்ய மாவதியுடன் ஸரஸ்வதி, அநேகமாகப் பாட்டை முடித்து விடுவாள் என்பது அவனுக்குத் தெரியும். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, சோம்பல் முறித்துக்கொண் டிருக்கும் ரகுபதியின் படுக்கை அறை வாயிற்படியில் ஸ்ரஸ்வதி வந்து நின்று. அத்தான்்! இன்றைக்குக்கூட என்ன இவ்வளவு தூக்கம்! சாவித்திரியைக் கைப்பிடிக்கப் போகும் சத்தியவாளுகிய நீ இப்படிச் சோம்பேறியாக இருக்கலாமா அத்தான்்? காபி ஆறிப்போகிறதாம். அத்தை ஒரு பாட்டம் சமையலறையில் இருந்துகொண்டு கத்துகிருள். ஹாம். . ஹாம். எழுந்திரு! அத்தான்் எழுந்திரு! இல்லாவிட்டால் திரு ப்பள்ளியெழுச்சி பாடினுல்தான்் எழுந்திருப்பாயோ?' என்று பரிகாசம் தொனிக்க உற்சாகத்துடன் ரகுபதியின் அரைத் தூக்கத்தைக் கலைத்துவிட்டாள்.

ரகுபதி ஆச்சரியத்துடன் ஸரஸ்வதியின் முகத்தைப் பர்ர்த் தான்். பிறகு, 'அப்படியானல், நேற்று வந்து போளுர்களே அவர்கள் வீட்டுப் பெண்ணுக்குச் சாவித்திரி என்று பெயரா, வரலா?' என்று கேட்டான். = s