* கங்ககோபாலளுேடு கான் ' 85
அழைப்பதுபோல், 'அத்தான்்!' என்று ஆசையுடன் ரகுபதியை அழைத்து ஒடி ஒடி வேலைகளைச் செய்தாள்.
"'உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். இதோ ஒரு நிமிஷத்தில் தயார்!" என்று சிரித்துக்கொண்டே பேசி அவன் மனத்தைக் கவர்ந்துவிட்டாள் தங்கம். "உனக்குப் பாடத் தெரி யுமா?' என்று ரகுபதி அவளே விளையாட்டாகக் கேட்டபோது, 'ஒ!' என்று தலையை ஆட்டினுள் தங்கம். 'பாடுவேன். ஆனல், லரஸ் அக்கா மாதிரி தாளம் கீளம் போட்டுக்கொண்டு சுத்த மாகப் பாடத் தெரியாது. கிராமத்துக்கு வரும் சினிமாவிலிருந்து எவ்வளவு பாட்டுகள் கற்றுக்கொண் டிருக்கிறேன் தெரியுமா? மாட்டிற்குத் தீனி வைக்கும்போது பாடுவேன். கோலம் போடும் போது பாடுவேன்; ஸ்வாமிக்கு மலர் தொடுக்கும்போது பாடு வேன்; கிணற்றில் ஜலம் இழுக்கும்போது பாடுவேன்; மாடு கறக்கும்போதும், தயிர் கடையும்போதும் பாடுவேன். என் பாட்டைக் கேட்டு ரசிப்பவர்கள் மேற்கூறியவர்கள்தாம், அத்தான்்! நான் பாடுவதைக் கேட்டுப் பசு மெய்ம்மறந்து கன்றை நக்குவதற்குப் பதிலாக என் முகத்தையே பார்த்துக்கொண்டு நிற்கும்.'
கிண்கிணியின் நாதம்போல் படபட வென்று தங்கம் பேசிக் கொண்டு போளுள். --
சரி, அப்படியானுல் ஸரஸ்வதியிடம் நாளைக்குள் கடவுள் வாழ்த்துப் பாடுவதற்கு ஏதாவது பாட்டு கற்றுக்கொள். நாளைக்கு நீதான்் பாடவேண்டும்' என்ருன் ரகுபதி திடீரென்று. ஆ. . . .' என்று வாயை ஆச்சரியத்துடன் திறந்தாள் தங்கம்.
'ஏறக்குறைய ஆயிரம் பேர்களுக்கு எதிரில் தான்் பாடு வதா? ஐயோ! தொண்டை எழும்பவே எழும்பாதே. எனக்கு பாடத் தெரியும் என்று இவரிடம் சொன்னதே ஆபத்தாக முடிந்துவிட்டதே' என்று பயந்துகொண்டே தயங்கினுள் தங்கம். ஆகவே, சிறிது அச்சத்துடன் ரகுபதியைப் பார்த்து, 'முதலிலேயே பெரிய பரீகூைடி வைத்துவிட்டீர்களே! யாரும் இல்லாத இடத்தில் என்னவோ வாய்க்கு வந்ததைப் பாடுவேன் என்று சொன்னல், விழாவுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடு என்கிறீர்களே அத்தான்். நன்ருக இருக்கிறதே!' என்று கன்னத்தில் வலது கையை ஊன்றிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே கூறிஞள்.