பக்கம்:இரு விலங்கு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம்

79

தண்டையம் புண்டரிகம் og

கொண்டு மேலும் மேலும் நெருங்கி வீறு பெற்று வந் தான். தேவலோகத்தை அவன் தன்னுடையதாகக் கொண்ட பிறகு தேவர்கள் பலர் அவனுக்கு அடிமையா னர்கள். பலர் அவன் வருகிருன் என்று கண்டு ஒடிஞர் கள். ஒடும் போது கீழே வீழ்ந்து உருண்டார்கள். குர பன்மாவினுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தேவர்களுக்கு அச்சம் உண்டாயிற்று. அப்போதே ஒடத் தொடங்கினர்கள். ஒருவர் மேல் ஒருவர் உருண்டு ஒடிஞர் கள். அவன் பிடிக்கு அகப்பட்டுவிட்டால் ந ம் மை க் கொன்று விடுவானே என்ற அச்சத்தால் நான் முன், நீ முன் என்று ஒடிச்கொண்டே இ ரு ந் த ர் க. ஸ். அந்த நிலையை முருகப் பெருமான் மாற்றினன். தன்னுடைய திருக்கரத்திலுள்ள வேலாயுதத்தை எடுத்து வீசிச் சூரனை அழித்தான். -

இருவகை அமைதி

தேவர்கள் மிகப் பழங்காலத்தில் அ ைம தி யாக வாழ்ந்தார்கள். தங்கள் தங்கள் பதவியிலே ப ற் ைற வளர்த்து, அந்தப் பதவியில் மோகம் வைத்துக் கடவுளே மறந்து வாழ்ந்தார்கள். தங்கள் நிலை என்றும் மாருதது என்ற எண்ணம் கொண்டவர்களேப் போல அவற்றை யெல்லாம் தங்களுக்கு அளித்த இறைவனேக் கூட மறந்து இருந்தார்கள். செல்வச் செருக்கிலுைம் ஆற்றலால் உண்டான ஆணவத்தாலும் அவர்கள் தங்களே மலேபோல எண்ணிக்கொண்டு ஆடாமல் அசையாமல் இருந்தார்கள். அத்தகையவர்களுடைய செருக்கைப் .ே ப ா க் கு ம் பொருட்டு ஆண்டவன் குரனே உண்டாக்கினன். பெரும் காற்று வந்தால் பிரளய காலத்தில் மலைகள் எல்லாம் உருண்டு ஓடும் என்று சொல்வார்கள். மற்றக் காலத்தில் காற்றைத் தாங்கிக்கொண்டு துளக்கமில்லாமல் இருப்ப தல்ை மலேக்கு அசலம் என்று பெயர், தேவர்கள் அப் படித்தான் சிறு சிறு துன்பங்கள் வந்தால் அவற்றைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/101&oldid=1402489" இலிருந்து மீள்விக்கப்பட்டது