பக்கம்:இரு விலங்கு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இரு விலங்கு


முன்னலும், மோகம் பின்னலும் வந்தால் அந்த மோகம் போளுலும் அன்பு நில நிற்கும். -

இளமை மணம்

- இந்தக் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நாட்டில் சின்னஞ்சிறு பிராயத்தில் திருமணம் செய்து வந்தார்கள். இப்போது அத்தகைய மணம் நடக்க வேண்டுமா வேண்டாமா என்பதைப்பற்றி இங்கே ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லே. ஆனல் அந்தக் காலத்தில் இளம்பருவத்தில் மணம் செய்தது முறை யாகுமா என்பதை மட்டும் இங்கே ஆராய விரும்பு கிறேன். புறக்கண்ணேக்கொண்டு புற அழகில் ஈடுபட்டு மோகத்தை அடைகிற பருவம் காசேப் பருவம். அப் படியே மங்கைப்பருவம் உடையவர்கள் புற அழகைக் கண்டு மாத்திரம் மனத்தைச் செல்லவிடுகிருர்கள்; பழங் காலத்தில் சின்னஞ்சிறு பிராயத்தில் மணம் செய்ததனுல் அன்பை முதலில் உண்டாக்கினர்கள். இன்னுருக்கு இன்னர் மனேவி என்ற எண்ணம் மனத்தில் உண்டாகும் போது அவர்களுக்குள்ளே ஒருவகை உறவு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. பருவம் வராமையில்ை பருவ உணர்ச்சியால் தோன்றும் குறைபாடுகள் உண்டரவ தில்வே. கணவன் கறுப்பாய் இருந்தாலும் நம் கணவன் என்ற பக்தி உள்ளே வளர்ந்து வந்தது. அப்படியே மனேவி கறுப்பாக இருந்தாலும் இவள் நம் மனைவி என்ற உறவும் பற்றும் வளர்ந்து வந்தன. இந்தப் பிறவியில்ே முதலில் தனித்தனியாக இருந்தாலும் மணமாகி ஒன்று பட்ட பிறகு பிறப்பிலேயே இணேந்தவர்கள் போல ஆகி. விடுவார்கள். பேதைப் பருவத்தில், நெஞ்சில் இது நமக் குரிய பொருள் என்ற எண்ணம் பதிந்து விட்டால் அதை எளிதில் மாற்ற முடியாது.

அதற்குமாருகப் புறத் தோற்றத்திலும் புற அழகி லும் மனிதன் ஈடுபடுமிடத்து, அந்த இரண்டும் குறையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/130&oldid=1283961" இலிருந்து மீள்விக்கப்பட்டது