பக்கம்:இரு விலங்கு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இரு விலங்கு


பாகனும் தோற்றுவான். குருடர்களாக இருந்தவர்கள் யானையைத் தொட்டுப் பார்த்த கதை நமக்குத் தெரியும். ஒவ்வொருவனும் தான்தான் தொட்டுப் பார்த்த அங்கத் தைப் பற்றிப் பேசினன். யாரும் யானையை முழுமையாகக் கண்டவர் அல்ல. உலகில் உள் ள வ ற் றி ன் முழு அழகைக் கண்டு அந்த அழகைப் படைத்த ஆண்ட வனே எண்ணிப் பாராட்டலாம். நல்ல மலரைப் பூம் பொய்கையில் வைத்து அழகைப் பாராட்டுபவர்களே சிறந்தவர்கள். அதனேப் பறித் து ப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்று எண்ணுகிறவர்கள் சிறந்தவர் கள் அல்ல. எந்த வகையில் அழகைக் கண்டாலும் அதன் வாயிலாக அதைப் படைத்தவக்னத் காணுகின்ற திறமை நல்லவர்களுக்கே உண்டாகிறது.

அருணகிரியார் இப்போது சொல்கிற நெஞ்சு அத்தகையது அன்று. அந்த நெஞ்சு எதனேயும் முழுமை யாகப் பார்க்கிறது அன்று உயிருடைய உடம்பில் உயிர் இருக்கிறதே, உள்ளமும் இருக்கிறதே என்று நோக்குவது இல்லை. அந்த உடம்பில் உள்ள அங்கங்களைத் தனித் தனியே பார்த்து அவற்றின் அமுகில் ஈடுபட்டு, மயலில் ஆழ்கிறது; முழுமையாக இருக்கும் பொருளேத் துண்டு பண்ணி ஒவ்வொன்றையும் தனித்தனியே சுவைப்பது புலால் உண்ணுகிறவர்கள் வழக்கம், அதுபோல் இந்த நெஞ்சு ஒருவகையில் புலால் உணவை உண்ணுவது போலச் செய்கிறது. ஒவ்வோர் அங்கமாகக் கண்டு அதன் அழகில் ஈடுபட்டு மேலே செல்கிறது.

காளையின் கதை ஒர் இளம் பிள்ளை, காகிளப் பருவம் உடையவன், ஒரு பெண்ணேப் பார்த்தான். அவளுடைய மேனி அழகைப்

பார்க்கிறபோது முதலில் முகத்தில் பார்வை சென்றது. - அந்த முகத்தில் கண்ணக் கண்டான் கண்வழியே கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/136&oldid=1283964" இலிருந்து மீள்விக்கப்பட்டது