பக்கம்:இரு விலங்கு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இரு விலங்கு

பிறப்பும் இறப்பும்

  'னிதனுடைய வாழ்வின் எல்லைகள் இரண்டு. ஒன்று பிறப்பு, மற்றொன்று இறப்பு. வாழ்க்கை என்று சொல் வதே பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது. இறப்பு, பிறப்பு என்பன உடம்பைச் சார்ந்தன. ஆனால் அவற்ருல் வரும் துன்பங்கள் உடம்போடு கூடிய உயிரைச் சார்ந்துள்ளன. இந்த இரண்டையும் நோய் என்று சொல்வார்கள். பிறப்பு உண்டானால் இறப்பும் நிச்சயம் உண்டாகும். பிறப்பினால் தோன்றி வளர்கின்ற உடம்பு அழிவது இறப்பாகும். மலபாண்டமாகிய இந்த உடம்பு நெடுங்காலம் இ ரு க்கு மெ ன் று ம், இதனை வைத்துக் கொண்டு இறவாத வாழ்வு வாழலாம் என்றும் சொல்வது வெறும் கற்பனையே. 'தோற்றம் உண்டேல் ஒடுக்கம் உண்டு' என்பது ஒரு நியதி.
 பிறந்தவர்கள் மீட்டும் பிறக்காமல் இருக்கும் நிலையை அடைவதுதான் முத்தி என்பது. சரீரத்தின் தொடர்பு இல்லாமல் இருக்கிற நிலையே முத்தி எனப் படுவது. எப்போ தும் உயிரானது உடம்போடு சேர்ந்து தான் இருக்கும் அல்லது இறைவன் திருவடியில் ஒன்றி இருக்கும், உடம்புகள் மூன்று என்பதும், பிறப்பினால்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/23&oldid=1296752" இலிருந்து மீள்விக்கப்பட்டது