பக்கம்:இரு விலங்கு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு விலங்கு

9


சொன்னான், "உனக்கு என்ன வரும்?" என்று முருகன், கேட்க, "வேதம் வரும்" என்று அவன் சொன்னான். முருகப்பெருமான், "வேதத்தைச் சொல்" என்று கேட்கப் பிரமன், "ஓம்" என்று தொடங்கினான். உடனே, "அதன் பொருள் என்ன?" என்று முருகன் கேட்க, பிரமன் தெரி யாமல் விழித்தான்.

கதையின் கருத்து

 ந்தக் கதையில் ஒரு சிறந்த உண்மை புலனாகிறது. கல்வியிலே முற்றவல்லவனாக இருப்பவன் பணிவு உடைய வகை இருந்தால்தான் தெளிவு பிறக்கும். நான் என்ற அகந்தை அவனுக்கு இருக்குமானால் அவன் பெற்ற கல்வியில் குழப்பம் உண்டாகும். அதுபோல் இங்கே பிரமன் தனக்குரிய அதிகாரத்தினால் தருக்கிப் பணிவின்றி நின்றான்; வணங்குவதற்குரிய முருகனைக் கண்டும் வணங் காமல் இருந்தான். அவன் வேதத்தில் வல்லவனானாலும் தருக்கினால் தெளிவு பெறாமல் போனான். முருகன், "உலகத்தை எல்லாம் படைக்கின்ற உனக்கு இந்தப் பொருள் தெரியவில்லேயே! அறியாதவன் படைத்தால் உலகம் உருப்படுமா?" என்று அவன் தலையில் குட்டிக் காலில் தளைபூட்டிச் சிறை வைத்தான். இந்தக் கதை, பெரிய அதிகாரியானாலும் அவன் தவறு செய்தால் அவனை அவனுடைய தலைவன் ஒறுப்பான் என்ற முறையை நினைவூட்டுகிறது.

கணக்கு

 "னக்கு முருகப்பெருமான் திருவருள் இருக்கிறது; ஆகையால் பிறப்பு வராது" என்று உறுதியாக அருண கிரியார் எண்ணி இருந்தார். 
 "இல்லை, இல்லை. பிறப்பை உனக்குக் கொடுக்கிறவன் பிரமன் அல்லவா? அவன் உனக்குப் பிறப்பைக் கொடுத்து விட்டால் என்ன செய்வாய்?' என்று ஒருவர் கேட்கிறார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/31&oldid=1402454" இலிருந்து மீள்விக்கப்பட்டது