பக்கம்:இரு விலங்கு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாயிரம் கண்

31


மென்று நினைத்துப் பெற முடியாது. ஆனால் பெண்ணைப் பெற்றவர்கள் தம்முடைய முயற்சியினால் அழகான மாப் பிள்ளையைத் தேடிக்கொள்ளலாம். ஆகவே அழகான மாமியாரும், அழகான மாமனாருமாகிய திருமகளும் திரு மாலும் தம்முடைய அழகான குழந்தைகளான தேவ சேனைக்கும், வள்ளிக்கும் அழகான மாப்பிள்ளையாகிய ஒருத்தனைத் தேடிக்கொண்டார்கள். அவன்தான் முருகன். அவன் உரிமையுள்ள மாப்பிள்ளை, திருமாலுக்கு மருகன். உரிமையும், அழகுப் பெருமையும் உடைய மாப்பிள்ளை என்பதை,

மாலோன் மருகனை

என்பதனால் நினைவூட்டுகிறார் அருணகிரியார். அழகான மாமனாருக்கு மருமகப் பிள்ளையாக இருக்கிற அழகன் திருச்செங்கோட்டில் இருக்கிறான். அவன் கண்ணாலே காண்பதற்குரிய திருக்கோலம் படைத்திருக்கிறான் என்ப தைச் சொல்ல வருகிறார். ஆகையால் இங்கே குரசங் காரம் செய்த பெருமான் என்றோ, ஞான பண்டித சாமி என்ரறோ சொல்லவில்லை. அவன் அழகன் என்பதைத் தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் வருணனை செய்யத் தொடங்குகிறார்.

மன்றாடி மைந்தன்

 னி அடுத்தபடி சிவபெருமானுடைய பிள்ளை என்று சொல்ல வருகிறார். பல இடங்களில் சிவபெருமானுடைய மைந்தன் முருகன் என்பதைப் புலப்படுத்தியிருக்கிறார். 

முதல் பாட்டிலேயே,

                          "செஞ் சடாடவிமேல்
  ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
  கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன்."  

என்றார். அப்படிச் சொல்லும்போதெல்லாம் ஏதாவது குறிப்பை வைத்தே சிவபெருமானை அவர் வருணிப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/53&oldid=1402467" இலிருந்து மீள்விக்கப்பட்டது