பக்கம்:இரு விலங்கு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இரு விலங்கு

எடுத்துச் செல்லும் குரங்கினத்தில் குட்டிக்குக் கவலை. பூனை இனத்தில் தாய்க்குக் கவலை;

முருகன் கவலை

 லகத்தில் உள்ள ஆருயிர்கள் எல்லாம் குழந்தை கள். அந்தக் குழந்தைகளுக்குத் தாயாக இருப்பவன் இறைவன். ஆருயிர்கள் தம்முடைய முயற்சியினால் இறைவனை அடைய வேண்டுமென்று பல வகையான சாதனங்களை மேற்கொண்டு உயர்ந்து நின்று இறைவனை அடைய வேண்டும். இதுதான் இயற்கை. ஆனால் உயிர் களை ஆளவேண்டும் என்ற கவலை முருகனுக்கு உண்டா யிற்று, தாய்ப் பூனையைப் போல அவன் பேரருளுடைய வனாக இருக்கிறான். சிறந்த வள்ளல்கள் தம்மிடம் உள்ள பொருளை வாங்கிக்கொள்ள இரவலர்கள் வரவேண்டுமே என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். தலையில் சுமையை வைத்திருக்கும் ஒருவன் அந்தச் சுமையை இறக்கும் இடம் எங்கே என்று தேடுவது போல, தம் முடைய பொருளை இரவலர்கள் வாங்கிக்கொள்ள வேண்டுமே என்று மிக்க ஆர்வத்துடன் அவர்களை நாடி இருப்பார்கள். இரவலர்களுக்கு, 'நமக்கும் பணம் கொடுப்பார் யார்?' என்று கவலை இருப்பது போலவே, நல்ல வள்ளலுக்கு, நம்மிடம் வந்து வாங்குவார் யார்?" என்ற கவலை இருக்கும். முருகப் பெருமானாகிய வள்ளல் தன்னுடைய பேரருளை வள்ளி நாச்சியாருக்கு வழங்க வேண்டுமே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். ஆகையால் அவளைத் திருடிச் செல்லவேண்டுமே என்று கவலைப்பட்டான் என இந்தப் பாட்டில் கூறுகிறார். 
              செம்மான் மகளைக் களவுகொண்டு 
    வரும் ஆகுலவனை.

ஆகுலவன்-கவலை உள்ளவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/68&oldid=1298508" இலிருந்து மீள்விக்கப்பட்டது