பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு மல்லர்கள்

29


 அவனை எதிர்த்து நிற்க ஆளே கிடையாது. அவனுக்குக் கோபம் வந்தால், ஒரு காலால் தரையைத் தட்டுவானாம்; உடனே சுற்றியுள்ள பூமியே கிடுகிடுத்து ஆடுமாம்! அவன் அசுரப் பிறவியாயிருந்ததால், சாதாரண மனித இனத்தைச் சேர்ந்த எவனும் அவனை எதிர்த்து நிற்க முடியாதென்று மக்கள் தெரிந்திருந்தனர். ஒரு சமயம் இடியிடிக்கும் பொழுது, அவன் ஒரே கையால் ஓங்கியடித்து, இடியிலே தோன்றிய வச்சிராயுதத்தைச் சப்பையாக்கிச் சட்டைப் பையிலே துாக்கிப் போட்டுக் கொண்டான் என்று கூறுவதுண்டு. அது உண்மைதானா என்பது தெளிவாய்த் தெரியாது.

அயர்லாந்திலிருந்த பயில்வான்கள், மல்லர்கள் பலரையும் அவன் மட்டம் தட்டிவிட்டான். ஆனால், மல்லன் மக்கெளல் மட்டும் அவனிடம் சிக்கவேயில்லை. மக்கெளலையும் எங்காவது கண்டுபிடித்து, அவன் முதுகிலும் மண் புரட்டிக்காட்ட வேண்டுமென்பது அவனுடைய ஆசை. கோழி, குப்பை மேட்டில் ஏறி அமர்வது போல, மக்கெளல் குன்றின் மேல் வசித்து வந்த போதிலும், அசுரன் அவனை விடுவதாயில்லை; அவனைத் தேடிக்கொண்டேயிருந்தான். ஆனால், ஒரே காலால் பூகம்பம் விளைவிப்பவனும், ஒற்றைக் கையால் வச்சிராயுதத்தைச் சப்பையாக்குபவனுமான அசுரனை அவன் எப்படி எதிர்த்து நிற்க முடியும் ? குகுல்லின் தாம்போதிக்கே வந்து தன்னைச் சந்திக்கப்போவதாகக் கேள்விப்பட்டுத்தான் மக்கெளல் அங்கிருந்து கிளம்பிவிட்டான். திடீரென்று மனைவியிடமும் பாசமும் பெருகிவிட்டது. உடனே ஊரை நோக்கிக் கிளம்பிவிட்டான். முன் சொன்னது போல் முழுத் தேவதாரு மரம் அவனுக்கு ஊன்றுகோலாக அமைத்திருந்தது.

நாக்மேனிக் குன்றின் மேல் குடிசை கட்டிக் குடியிருப்பதுபற்றிப் பலர் மக்கெளலிடமே கேட்டிருக்கின்றனர். "ஏனப்பா, மக்கள் இருக்கும் இடங்களை விட்டுவிட்டு, அவ்வளவு உயரே வீடு வைத்துக்கொண்டிருக்கிறாய்? பெரும்பாலும் நீ வீட்டிலிருப்பதில்லை. குன்றின் மேலே மழையும் பனியும் அதிகம். மேலும், அங்கே குடிக்க நல்ல தண்ணிர் கூடக் கிடையாதே !" என்று அவர்கள்