பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



124 இறையனார் அகப்பொருள் (களவு 'இவளே நின்னல திலளே யாயும் குவளை உண்கண் இவளல திலளே யானும் ஆயிடை யேனே மாமலை நாட மறவா தீமே.' இவ்வகை ஓம்படுத்துத் தான் தவிரும் என்றவாறு. தான் தவிர்வதோ செயற்பாலது? போகாளோ? எனின், தனது வருத்தத்திற்குக் கவன்று போகா தாளல்லள், இதனைப் பண்பாக உரைத்தற்பொருட்டுத் தவிரும் என்பது. செவிலித் தாய்க்கு உரைத்தாளன்றே, அவள் அதனைப் பண்பாக உரை யாளோ எனின், இவள் சொல்லியது தெளியுமாறு செவிலித் தாய் சொல்லியது தெளியார் என்றவாறு; என்னை P எப்பொழு துங் கைவிடாத மரபின ளாகலான் என்பது. இனித், தலைமகளைத் தலைமகன் ஆற்றுவித்துக் கொண்டு சென்றதற்குச் செய்யுள் : மெல்லக் கொண்டேகல் 'பண்தான் அனையசொல் லாய்பைய எகு பறந்தலைவாய் விண்டார் படச்செற்ற கோன்வையை சூழ்வியன் நாட்டகம்போல் வண்டார் பொழிலும் மணியறல் யாறும் மருங்கணைந்து கண்டார் மகிழுந் தகைமைய தியாஞ்செல்லுங் கானகமே.' (கஅ0) 'சிறியபைங் கட்களி றூர்ந்து தென் பாழியிற் செற்றெதிர்ந்தார் மறியவை வேல்கொண்ட தென்னவன் வையைநன் னாட்டகம்போல் முறியபைம் போதுகள் மேல்வண்டு பாடி முருகுயிர்க்கும் கறியபைங் கானகை யாது நடக்கவென் நன்னுதலே.' (கஅக) ' அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்கு அலமரல் வருத்தம் தீர யாழநின் நிலமென் பணைத்தோள் எய்தினம் ஆகலிற் பொரிப்பூம் புன்கின் எழிற்றகை ஒண்முறி சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி நிழல்காண் தோறும் நெடிய வைகி மணல்காண் தோறும் வண்டல் தைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே மாகனை கொழுதி மகிழ்குயில் ஆலும் நறுந்தண் பொழில கானம் குறும்ப லூயாஞ் செல்லும் ஆறே.' (ஈற்றினை, க )