பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



142 இறையனார் அகப்பொருள் (களவு மும் தழையும் கண்ணியும் கோடற்கு, என்னிற் சிறிது நீங் கினாயாக, ஈங்கு நின்றேன் ஒரு மணிச்சுனை கண்டேன் ; அம் மணிச்சுனை தான் ஆம்பலே குவளையே நெய்தலே தாமரையே என்றிப் பூக்களால் மயங்கி மேதக்கது கண்டு, வேட்கையான் ஆடுவான் இழிந்தேன்; இழுக்கிக் குட்டம் புக்கேன்; புக்குத் : "தோழியோ!" என, நீ . கேளாயாயினாய்' ஆக, ஒரு தோன்றல் வந்து தோன்றி எனது துயர் நீக்குதற்காகத் தன் கைநீட்டினான் ; நீட்ட, யானும் மலக்கத்தான் நின் கையெனப் பற்றினேன் ; பற்ற, வாங்கிக் கரைமேல் நிறீஇ நீங்கினான் : நீ அன்று கவலுதி யெனச் சொல்லேன் ஆயினேன் : நீ எவ்வெல்லைக்கண்ணுங் கைவிடாதாய் அஞ்ஞான்று கைவிடுவா யாயிற்று விதியாகாது எனிற் பிறிதொன்றாவது கொல்லோ எனக் கலங்கி வேறுபட் டேன்' என்று தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நிற்கும், பின்னைத்தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும், மேற்சொன்ன வாற்றான் என்பது. அங்ஙனமாயின், தோழி காவலொடு மாறுகொள்ளாதோ எனின், கொள்ளாது, தோழிக்கு அறத்தொடு நிற்குமாகலான் என்பது. காவலொடு மாறு கொள்ளினும் காவற்குற்றப் பட்டேன் என்று தோழி இறந்துபடாமைக் காக்கும் விதி என்பது. அஃதே யெனின், நிகழ்ந்த ஒழுக்கம் மறைத்துக் களைந்து, படைத்துமொழிந்தமையாற் பொய்யுரைத்தவாறாம்பிற எனின், பொய்யுரைக்கப்பட்டதாகாது; என்னை, பழியும் பாவமும் அதனால் வாராமையின். என்னை , 'பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்.' (குறள் - உசு.உ) என்றாராகலின் குற்றமின்று என்பது. அறத்தொடு நிற்கும் இடங்களைப் பெயரும் முறையும் சொல்லினமாத்திரையே இச்சூத்திரத்துப் பொருள். அறத் தொடுரிற்கும் இலக்கணமும், அவற்றுக்குச் செய்யுளும் மேலே காட்டிப்போந்தாம். (உசு)