பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



154 - இறையனார் அகப்பொருள் (களவு சூத்திரம் - கூஉ களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம் திங்கள் இரண்டின் அகமென மொழிப. என்பது என்னுதலிற்றோ எனின், களவினுள் தங்கி ஒழுகும் ஒழுக்கம் இத்துணைக் காலமல்லது இல்லை யென்று வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : களவினுள் தவிர்ச்சி என்பது - களவி னுள் தங்குதல் என்றவாறு ; வரைவின் நீட்டம் என்பது - வரைந்தெய்துந் துணை நீட்டிக்குங்காலம் என்றவாறு ; திங்கள் இரண்டின் அகமென மொழிப என்பது - இரண்டு திங்களகம் எனக்கொள்க என்றவாறு. இவ்வாற்றானும் இஃது உலகத்து இயல்பன்று என்பது பெற்றாம், உலகத் தொழுக்கத்திற்குக் காலவரையறை இன்மை யான் என்பது. இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தவிடத்துப் பிராய மும் ஈங்கே உரைக்கப்பட்டதாம். பதினோராண்டும் பத்துத் திங்களும் புக்க தலைமகளோடும், பதினையாண்டும் பத்துத் திங்க ளும் புக்க தலைமகனைப்போலும் புணர்தல் வேண்டிற்றென்பது பெற்றாம். இவளும் இருதிங்கள் களவொழுக்கொழுகப் பன்னீ ராட்டைப் பிராயத்தாளாம். அது மக்கட்பேற்றுக்குக் காலம் ; களவொழுக்கத்திற்குப் பொருந்தாதென விலக்கப்பட்டதாம் ஆசிரியரான் என்பது இவனும் இருதிங்கள் களவொழுக்கு ஒழுகப் பதினாறாட்டைப் பிராயத்தானாம். அஃது ஆண்மை நிலைபெறுங் காலமாகலாற் களவொழுக்கிற்கு விலக்கப்பட்டது என்பது. அஃதேயெனின் இருதிங்கள் என்னாது அகம் என்றது எற்றிற்கோ எனின், இருதிங்களுள் ஐந்தானும் ஆறானும் நாள் உளவாகக் களவொழுக்கு ஒழிந்து நின்று, வரைந்து புகுவத னோடும் மறுப்பதனோடும் அத்துணை நாளும் புக்கு நிறைந்து நின்றபின்னை அதுபடின் மிகுவான் புகும் என்பது. அஃதே யெனின், இருவர்க்கும் மூப்புப் பிணி சாக்காடும் இல்லையென்று மேற் சொல்லியதனோடு மாறுகொண்டு காட்டிற்றாம், அதுபட உரைத்தமையின் என்பது. எங்கனமோ எனின், இருதிங்கட் புகப் பன்னீராட்டைப் பிராயத்தாளேயாயக்கால் பின்னைப் பதின் மூவாட்டைப் பிராயத்தாளாய் இவ்வகை நூற்றிருபது புக்குத் தலைமடியவேண்டும் என்பது; இவற்கும் அம்முறையே கொள்க என்பது; மூப்புப் பிணி உள்வழிச் சாக்காடுண்மையா னென்பது கடா. அதற்கு விடை எங்ஙனமோ எனின், இரு திங்கட்புக இவளும் பன்னீராட்டைப் பிராயத்தாளாய் இவனும்