பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



194 இறையனார் அகப்பொருள் (கற்பு * பூரித்த மென்முலை யாயன்று பூலந்தைப் போர்மலைந்த வேரித் தொடையல் விசய சரிதன்விண் தோய்கொல்லிமேல் மூரிக் களிறு முனிந்துகை எற்ற முழங்குகொண்டல் - மாரிக்கு முல்லையின் வாய்நக வேநீ வருந்துவதே. (ஙOx) நீரற வறந்த நிரம்பா நீளிடைத் துகில்விரித் தன்ன வெயிலவிர் உருப்பின் அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர் தாம்வரத் தெளித்த பருவங் காண்வர இதுவோ என்றிசின் மடந்தை மதியின்று மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மாமழை பொறுத்தல் செல்லா திருத்த வண்பெயல் காரென் றயர்ந்த உள்ளமொடு தேர்வில் பிடவும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின் மலர்ந்தன பலவே.' (நற்றிணை - கக) இவை பிரிவிடைப் பருவங்கண்டு ஆற்றாளாய தலைமகளை "இது பருவமன்று; என்னை, அவர் பொய்யுரையாராகலான்; இதுவும் வம்பு வம்பினைப் பருவம் என்று தம் மடமையாற் பிட வும் கோடலும் கொன்றையும் மயங்கிப் பூத்தன' என்று வற் புறுத்தாள். வருவரென வற்புறுத்தியது 'மையார் தடங்கண் மடந்தை வருந்தற்க வாள்முனைமேல் நெய்யார் அயிலவர் காணப் பொழிந்த நெடுங்களத்து . வெய்யார் அமரிடை வீழச்செந் தூவிவெள் ளம்புகைத்த கையார் சிலைமன்னன் கன்னிநல் நீர்கொண்ட கார்முகிலே.' (கூ0ச) இது பிரிவிடையாற்றாளாகிய தலைம்களைத் தோழி, 'அவர் குறித்த பருவம் வந்ததாகலின் அவரும் பொய்யார், வருவர்' என்று வற்புறுத்தியது. ‘ கொடியார் நெடுமதிற் கோட்டாற் றரசர் குழாஞ்சிதைத்த வடியார் அயிற்படை வானவன் மா றன்வண் கூடலன்ன துடியார் இடையாய் வருந்தல் பிரிந்த துளங்கொளியார் அடியார் கழலார் அணுகவந் தார்த்த தகல்விசும்பே.' (ஙOரு ) இதுவும் அது. 'ஆமான் அனையமெல் நோக்கி அழுங்கல் அகன்று சென்ற தேமா நறுங்கண்ணி யாரையுங் காட்டுந்தென் பாழிவென்ற வாமா நெடுந்தேர் மணிவண்ணன் மாறன் வண் தீந்தமிழ்நர் கோமான் கொடிமேல் இடியுரும் ஆர்க்கின்ற கூர்ம்புயலே.' (B0சு) இதுவும் அது.