பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



204 (உரு) இறையனார் அகப்பொருள் (கற்பு சொல்லெச்சத்திற்குச் செய்யுள் : ‘ பள்ளத்து நீலம் பறந்தலைக் கோடிப்பட் டார்குருதி வெள்ளத்துச் செங்கழு நீர்வைத்த கோன்தொண்டி வண்டுமென்பூ வள்ளத்துத் தேமகிழ் கானல்வந் தார்சென்ற தேர்வழியெம் உள்ளத்தி னோடு சிதையவர் தூரும் ஒலிகடலே.' (ங.உ.ச) இனிக், குறிப்பெச்சம் வந்த செய்யுள் : ' இடியார் முகிலுரு மேந்திய கோனிர ணோதயன் றன் வடியா ரயிலன்ன கண்ணிதன் வாட்டம் உணர்ந்து வண்பூங் கடியார் கருங்கழி மேய்கின்ற கானற் கலந்தகன்ற கொடியா ரினுமிகத் தாமே கொடிய குருகினமே.' (ஙஉரு) எனவும் கொள்க.

சூத்திரம் - 59

முற்படக் கிளந்த பொருட்படைக் கெல்லாம்
எச்சம் ஆகி வரும்வழி அறிந்து
கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும்
கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே.

என்பது என்னு தலிற்றோ எனின், இந்நூலுள் எடுத்தோத்தே, இலேசே என்று இவற்றான் முடியாது நின்றனவெல்லாம் இது புறனடையாகத் தந்துரைக்க என்பது உளர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : முற்படக்கிளந்த பொருட் படைக்கு எல்லாம் என்பது - முன்னால் உரைக்கப்பட்ட சூத்திரத்துப் பொருட்கெல்லாம் என்றவாறு; எச்சம் ஆகிவரும் வழி அறிந்து என்பது - ஒழிவுபடவரூஉம் இடம் ஆராய்ந்து என்றவாறு ; கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும் என்பது - சொல்லப் பட்ட வாய்பாடின்றிப் பிறவாய்பாடு தோன்றினும் என்றவாறு ; கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே என்பது - அச் சொல்லப்பட்ட பத்து இலக்கணத்தானே உணர்ந்து உரைக்கப் படும் என்றவாறு. இது களவிடத்தொழிந்தது, கற்பிடத்தொழிந்தது என்று அறிந்து என்றவாறு. தலைச் சூத்திரத்துள், 'அன்பினைந்திணை' என்றதல்லது அன்பு உணர்த்துமாறு ஆண்டு உணர்த்தியதில்லை, இதுவே ஒத்தாகத்தந்து உணர்ந்து அதன் விகற்பமெல்லாங் கொள்க.