பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-க) இறையனார் அகப்பொருள் அவ்வேற்றுமைத்தொகை தாம் பல; அவற்றுள் இஃது எவ் வேற்றுமைத்தொகையோ எனின், ஏழாம் வேற்றுமைத் தொகை என்பது. அவ்வேழாம் வேற்றுமை உருபுதாம் பல ; அவற்றுள் யாது தொக்கது எனின், உள் என்பது தொக்கது. ஐந்திணையுட் களவு என்பதாயின், ஐந்திணையுள்ளுங் களவு வேறாகாதோ, குடத்துள் விளக்கும் தடற்றுள் வாளும் அவ் விடத்தின் வேறாயதுபோல எனின், ஏழாம் வேற்றுமை இடத் தையும் இடத்து நிகழ்பொருளையும் வேறு உணரவும் நிற்கும், வேறன்றி உணரவும் நிற்கும்; அவற்றுள், வேறு உணர நின்ற வழிக் காட்டிக் கடாவினாய்; வேறன்றி உணர நின்றவழிக் காட்டியக்கால் அதுபோலக் கொள்க. (அரங்கினுள் அகழ்ந் தான், மாடத்தினுள் அகழ்ந்தான் என்றதுபோல, ஐந்திணை யுள்ளுக் களவு வேறன்று என்பது. அஃதேயெனின், அன்பின் ஐந்திணைக் களவு அந்தணர் அருமறை' என அமையாதோ? 'எனப்படுவது' என்றது எற்றிற்கோ எனின், செய்யுளின்பத்தின் பொருட்டு வந்தது என் னும் ஒருவன்; அற்றன்று, அதனான் ஒருபொருள் உரைப்பல் என்னும் ஒருவன். அதனான் ஒரு பொருள் உரைப்பான் பக்கம் வலியுடைத்து. அஃதியாதோ எனின், களவு என்றற் குச் சிறப்புடைத்து என்றவாறு. ('ஊர் எனப்படுவது உறை2 யூர்' என்ற இடத்துப் பிறவும் ஊருண்மை சொல்லி, அவற்று ளெல்லாம் உறையூர் சிறப்புடைமை சொல்லும்.) இங்குப் பிற *வும் களவுண்மை சொல்லி, அக் களவுகட்கெல்லாம் இக் களவு சிறப்புடைத்து சுவர்க்கம் வீடுபேறுகளை முடிக்குமாகலான், 'எனப்படுவது' என்று சொல்லிச் சிறப்பிக்கப்பட்டது. அது பாயிரத்துள்ளும் உரைத்தாம். மற்று உலகத்துக் களவாயின எல்லாம், கைகுறைப்பவும் கண்சூலவும் கழுவேற்றவும் பட்டுப், பழியும் பாவமும் ஆக்கி,. நரகத் தொடக்கத்துத் தீக்கதிகளில் உய்க்கும். இது மேன்மக்களாற் புகழப்பட்டு ஞான வொழுக்கத் தோடு ஒத்த இயல்பிற்றாகலானும், பழி பாவம் இன்மையானும், 'எனப்படுவது' என்று விசேடிக்கப்பட்டது. எண்வகை மணம் இனி, அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள் என்பது; அந்தணர் என்பார் பார்ப்பார்; அருமறை என்பது வேதம்; மன்றல் என்பது மணம்; எட்டு என்பது அவற்றது தொகை கொடுத்துச் சொன்னவாறு. அவை யாவையோ எனின் - பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தர்வம், அசுரம், இராக்கதம், பைசாசம் என இவை;