பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-சு) இறையனார் அகப்பொருள் 67 கலைமாள் வினுதல் 'சினமாண் கடற்படைச் சேரலன் தென்னறை யாற்றழிந்து மனமாண் பழியவை வேல்கொண்ட கோன்வையை நாடனைய கனமாண் வனமுலைக் கையார் வரிவளைக் காரிகையீர் இனமான் புகுந்தது வோவுரை யீர் நும் இரும்புனத்தே.' (கே) ' சிலைமாண் படைமன்னர் செந்நிலத் தோடச் செருவிளைத்த கொலைமா ணயில்மன்னன் தென்புனல் நாடன்ன கோல்வளையீர் இலைமாண் பகழிய னேவுண்டு தன்னினத் திற்பிரிந்தோர் கலைமான் புகுந்த துண் டோவுரை யீர் நுங்கள் கார்ப்புனத்தே.' (10) * கண்ணுற் றெதிர்ந்ததெவ் வேந்தர் படக்கடை யற்கொடிமேல் விண்ணுற்ற கோளுரு மேந்திய வேந்தன் வியன்பொதியிற் பண்ணுற்ற தேமொழிப் பாவைநல் லீரோர் பகழிமூழ்கப் புண்ணுற்ற மானொன்று போந்ததுண் டோநும் புனத்தயலே.' (சுக) வழி வினுதல் 1 வெல்லும் திறநினைந் தேற்றார் விழிஞத்து விண்படாக் (தேன் கொல்லின் மலிந்தசெவ் வேல்கொண்ட கோன் கொல்லிச் சாரலின் புல்லும் பொழிலிள வேங்கையின் கீழ்கின்ற பூங்குழலீர் செல்லும் நெறியறி யேனுரை யீர் நுஞ் சிறுகுடிக்கே.' (சுஉ) மொழிபொது கூறல் ' தன்னும் புரையும் மழையுரும் ஏறு தன் தானைமுன்னால் துன்னுங் கொடிமிசை ஏந்திய கோன்கொல்லிச் சூழ்பொழில்வாய் மின்னுங் கதிரொளி வாள்முகத் தீரென் வினாவுரைத்தால் மன்னுஞ் சுடர்மணி போதரு மோ நுங்கள் வாயகத்தே.' (சுகூ) என்பன கொள்க.. புதுவோன் போல என்பது - எஞ்ஞான்றும் அந்நிலத்துச் சென்று அறியாதானும் அவரைக் கண்டறியா தானும் போல என்றவாறு; பொருந்துபு கிளந்து என்பது - அந்நிலத்திற்கும் அவரை வினாதற்கும் பொருந்துவன கிளந்து என்றவாறு; மதி உடம்படுத்தற்கும் உரியன் என்ப என்பது- மதி என்பது அறிவு; அவ்வறிவினை ஒருப்படுத்தற்கும் உரியன் என்றவாறு. யார் அறிவையோ எனில், தோழியறிவை எனக் கொள்க. அவளது அறிவினை ஒருப்படுக்கும் எனவே, முன் கவர்ந்து நின்றது என்பது போந்தது. எங்கனம் கவர்ந்து நின்றதோ எனின், இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த ஞான்றுட்கொண்டு கண்சிவந்து நுதல்வேறுபட்டுக் காட்டிற்று; 'இவட்கு இவ்