பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



73 சூத்திரம்-எ) இறையனார் அகப்பொருள் நின்று, பதியும் பெயரும் பிறவும் வினாவத் துணிந்து உணரும் எனக் கொள்க; அதற்குச் செய்யுள் : 'செறிந்தார் கருங்கழல் தென்னவன் செங்கிலத் துச்செருவின் மறிந்தார் புறங்கண்டு நாணிய கோன்கொல்லிச் சாரல்வந்த நெறிந்தார் கமழ்குஞ்சி யானோ டிவளிடை நின்றதெல்லாம் அறிந்தேன் பல நினைந் தென்னையொன் றேயிவர் ஆருயிரே.' (எஎ) ' வண்ண மலர்த்தொங்கல் வானவன் மாறன்வை வேல்முகமும் கண்ணும் சிவப்பக் கடையல்வென் றான்கடல் நாடனைய பண்ணும் புரைசொல் இவட்கும் இவற்கும் பல நினைந்திங்கு எண்ணுங் குறையென்னை ஒன்றே இருவர்க்கும் இன்னுயிரே.' (எஅ ) 1' எனல் காவல் இவளும் அல்லள் மான்வழி வருகுவன் இவனும் அல்லன் நரந்தங் கண்ணி இவனோ டிவளிடைக் கரந்த உள்ளமொடு கருதியது பிறிதே நம்முன் நாணுநர் போலத் தம்முள் மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல உள்ளத் துள்ளே மகிழ்ப சொல்லும் ஆடும் கண்ணி னானே.' இதனை மதியுடம்பாடு என்றமையான் முன்னை யறிவு கவர்ந்து. நின்றது என்பது பெற்றாம், துணிவுணர்வு பெற்றிலம் என்பது. அஃதேயெனின், ' அம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி' என்று மூன்றி னையும் உணர்ச்சி என்று சொன்னமையால் துணிவுணர்வே ஆகற்பாலது எனின், துணிவுணர்வும் உணர்வே யெனப்படும், ஐய வுணர்வும் உணர்வே யெனப்படும், உணர்வென்னும் பொதுமை நோக்க; (சந்தனமும் காஞ்சிரையும் மரம் எனப்பட்டதுபோல. இவ்வாறாகவே, தோழி ஆராய்ச்சியுடைமையும், ஆசாரமுடைமை யும், ஏதத்திற்குக் கவறலும், நன்குமதித்தலும் வெளிப்படும் என்பது. அஃதேயெனின், ' அம்மூன்றும் என்ப தோழிக்கு உணர்ச்சி' என்று, மூன்றுமேயென்று துணிந்தானாகில், உம்மை கொடுத்துச் சொல்லவேண்டும். என்னை , இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்.' (கிளவி - ங கூ) என்றாராகலின்; அஃதேல், உம்மை ஈண்டுத் தொகுத்துக் கூறி னார், உம்மை ஈண்டுத் தொகுத்தற்கு இலக்கணம் உண்மையான். 1. தொல். பொருள். களவியல் : உங