பக்கம்:இறைவர் திருமகன்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. கை கழுவிய பாவம்

ரோமானிய ஆட்சித்தலைவன் பாண்டியஸ் பைலேட். வெள்ளிக் கிழமை அதிகாலையில் அவன் சபைக்கு யூதர்கள் கூட்டம் ஒன்று வந்தது. கூச்சலும் ஆரவாரமும் மிகுந்த அந்தக் கூட்டம் பாண்டியஸ் பைலேட்டின் தீர்ப்புக்காக ஒரு கைதியைப் பிடித்துக் கொண்டு வந்தது. அந்தக் கூட்டத்தின் முன்னணியிலே ஜெருசலம் ஆலயத்தின் பெரிய குருமார்கள் வந்திருந்தார்கள். அவர்கள் பிடித்து வந்த குற்றவாளி இயேசுநாதர்தான்!

அமைதியும் பெருந்தன்மையான தோற்றமும் கொண்ட இயேசுநாதரைக் கண்ட பாண்டியஸ் பைலேட் மலைத்துப் போனான். இவரா குற்றவாளி இருக்கவே முடியாது. நாள்தோறும் குற்றவாளிகளையே கண்டுகண்டு . பழகிப்போன அவனுக்கு - கொடுமையும், புன்மையும் நிறைந்த குற்றவாளிகளின் முகங்களையே