பக்கம்:இறைவர் திருமகன்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

கண்டுகண்டு பழகிப்போன அவனுக்கு, இந்தப் புதிய குற்றவாளியைக் காண வியப்பாயிருந்தது.

குருமார்கள் இயேசுநாதர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். பொய் கலந்த அந்தக் குற்றச் சாட்டுகளிலே பெரிய குற்றச்சாட்டு அவர் தம்மை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகிறார் என்பதுதான். அத்தனை குற்றச் சாட்டுகளையும் கேட்டுக் கொண்டு அவர் பேசாமல் நின்றார்.

பாண்டியஸ் பைலேட், அவரை நோக்கி, "நீங்கள் யூதர்களின் அரசர் என்பது உண்மையா?" என்று கேட்டான்.

'ஆம்! நான் ஓர் அரசன்தான்! உண்மையை அறிந்தவர்கள் என் சொற்கள் உண்மை என்று காண்பார்கள்" என்றார் அவர்.

உண்மை பொய் என்பதெல்லாம் ரோமானிய ஆட்சித் தலைவனுக்குத் தெரியாது. சாட்சியங்களைக் கேட்டு அவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு குற்றவாளிகளுக்கு அச் சாட்சியங்களுக்கேற்ற தண்டனையை அளிப்பது தான் அவன் வழக்கம். இயேசுநாதருக்கு எதி